--புவனேஷ்-- எழுதியவை | திசெம்பர் 16, 2009

மிஸஸ். ஆனந்த் (part – 2)


மிஸஸ். ஆனந்த் (part – 1)

அவன் என் சமதத்துக்கு எல்லாம் வெயிட் பண்ணல.. கிளம்பி என்ன இழுத்துட்டு போய்ட்டான்..

அங்க என்னனென்னமோ டெஸ்ட் செஞ்சாங்க.. எல்லா டெஸ்ட் எடுக்கும்போதும் என் பேரக்கேட்டாங்க.. எல்லா இடத்துலையும்  அவன் “மிஸ்ஸஸ்.ஆனந்த்” னே கொடுத்தான்..

 ஏன் என் பேர சொல்லல ?

 சொல்லல.. 

 அதான் ஏன் ?

 (அதுக்கு அவன் பதில் சொல்லல..)

 சரி அவனுக்கு என் பேர நோயாளி லிஸ்ட்ல பாக்கபுடிக்கல போல.. அதுவும் இல்லாம என் பேர சொல்லி ஏதாவது இருக்குனு சொன்னாங்கனா அவனால தாங்க முடியாது.. உங்களுக்கு இது முட்டாள் தனமா கூட தெரியலாம்.. பட் இது லவ்.. ஐ லவ் ஹிம்.. ஹி லவ் மீ மோர் தன் எனிதிங்!!

 அப்புறம் அவன் மட்டும் போய் டாக்டர பாத்தான்.. வெளிய வந்தான்..

 என்ன சொன்னாங்க ??

 என்னை நேராகப்பாத்து சிரித்தான்.. ஒன்னும் இல்லன்னு சொன்னாங்க..

 அப்பவே எனக்கு தெருஞ்சிருச்சு.. எனக்கு பெரிய நோய் னு  எனக்கு சாதா தலைவலினாவே இவன் செய்யற கூத்துல எனக்கு ஸ்பெஷல்  தலைவலியே  வரும்.. சோ சம் திங் ராங்!

 அந்த இரவு அவன் கவிதை சொல்லல.. நான் டாக்டர் கொடுத்த மருந்து சாப்படவுடனே தூங்கிட்டேன்.. காலைல எந்திரிக்க லேட் ஆகிடுச்சு .. அவன காணோம் .. வீட்ல நேத்து நனைச்சு வெச்சிருந்த துணி எல்லாம் காயப்போட்டுருந்தான்.. எனக்கு என்னமோ பிரச்சனை.. சந்தேகமே இல்லாம முடிவு பண்ணிட்டேன்..

ஆனா நான் இன்னைக்கு வரைக்கும் என்னனு அவன கிட்ட கேக்கல..

  இது நடந்து ஆறு மாசம் ஆச்சு.. அதுக்கப்புறம் எனக்கு என்னென்னமோ டெஸ்ட் செஞ்சாங்க, ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க .. இப்ப எனக்கு முடி எல்லாம் கொட்டிருச்சு..

 டேய்.. டே…. ய்

 சொல்லு

 இங்க பாரு கொஞ்சம் பேசணும்

 நீ என்ன பெருசா சொல்லப்போற

 நான் என்ன சொல்லப்போறேன்னு தெரியுமா ?

 அதான் உன் மூஞ்சி கலங்கிருக்கே.. பாத்தா தெரியாதா ?

 என்னனு சொல்லு பாப்போம்

 நான் வேற கல்யாணம் செஞ்சுக்கணும் அதான ?

 உனக்கு அப்படி ஒரு ஆசை இருந்தா செஞ்சுக்கோ

 ஆசை இல்லாமையா? பொண்ணு எல்லாம் பாக்க ஆரம்பிச்சுட்டேன்..

 (என் மனசில் இருந்த பாரமா இல்லை அவன சொன்னது எனக்கு கஷ்டமா இருந்துச்சான்னு என்று தெரியல.. கண்ணுல தண்ணி கட கடனு ஓடுச்சு) நிஜமாவா ??

 ஆமா உன்னோட ஹேர் ஸ்டைல் இருக்கற பொண்ணு தான் வேணும்.. உனக்கு தெருஞ்ச யாராவது இருக்காங்களா ?

 பன்னி.. (னு சொல்லிட்டு அவன போய் கட்டிக்கிட்டேன்.. அழுகையும் வந்துச்சு.. சிரிப்பும் வந்துச்சு.. )

நீ

அழுதுகொண்டே

சிரிப்பதால்

வானவில்லே வருமென்றாலும்

எனக்கு

கத்திரி வெயிலே போதும்!!

முடிகொட்டி எனக்குள்ள இருந்த தாழ்வு மனப்பான்மையை அவன் எப்படி போக்குனானே தெரியல.. என்ன ஷாப்பிங் இழுத்துட்டு போவான் மொதல்ல மக்கள் எல்லோரும் என்னைய வினோதமா பாக்கராமாதிரி தான் இருந்துச்சு.. இப்ப நான் மக்கள பாக்கறது இல்ல!!       

 அவன இன்னைக்கு வரைக்கும் ஒரு சொட்டு கண்ணீரோ, மூங்கில ஒரு சின்ன சோகத்தையோ காட்டல.. இந்த ஆறுமாசம் என்னோட சந்தோஷம்.. நீங்க எல்லாம் ஆயுசுக்கும் தேடற, கிடைக்கனும்னு ஏங்கற, போராடற அந்த வாழ்க்கை எனக்கு இந்த ஆறுமாசத்துல கிடச்சுது

 இப்படி தான் அன்னிக்கு..

 மிஸ்ஸஸ் ஆனந்த.. மிஸ்ஸஸ் ஆனந்த்..

 நர்ஸ் அம்மா கூப்பிடறாங்க  ரெண்டு நிமுசம் வெயிட் பண்ணுங்க.. வந்திடறேன்..

  ****

 எங்க விட்டேன்?? சரி அத விடுங்க.. நேத்து நைட்..

 டேய் எனக்கு இன்னைக்கு ரொம்ப வையுறு  வலிக்குது.. என்னால தூங்க முடியல.. பயமா இருக்கு

 (அவன்  முகம் இருண்டுருச்சு… கண்ணுல தண்ணி நிக்குது..).. ம ம ரு ந் ந்..

 மருந்தெல்லாம் வேண்டாம்…  நீ ஒரு கவிதை சொல்லு அது தான் எனக்கு மருந்து..

 (அவன் என் நெஞ்சுல படுத்து அழ ஆரம்பிச்சுட்டான்)

எப்பவும் நீ கவிதை சொன்னா நான் தான அழுவேன்.. இன்னைக்கு நீ அழற?

 (அவன் என்ன என்ன கட்டி பிடுச்சிறுனத பிடி இறுக்கமாச்சு.. அழுகை அதிகமாச்சு..)

 சொல்லு டா.. நீ அழ கூடாது.. உனக்கு என் ஹேர் ஸ்டைல் இருக்கற பொண்ணு சீக்கிரமே கிடைப்பா..

 (அவன் அழுதுட்டே..)

 உனக்கு

இங்கு என்ன வேண்டும் ?

எதை தேடி

எங்கு   செல்கிறாய் ?

 எனக்கு

இங்கு என்ன வேண்டும் ?

எதை தேடி

இங்கு இருக்க சொல்கிறாய் ?

 அப்புறம் அவன் அழுதுட்டே தூங்கிட்டான்..  அவன் தூங்கி நான் ராம்ப நாள் கழுச்சு பாக்கறேன்.. நேத்து அவன் அழுததுக்கு அப்புறம் நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன்.. அவன் மனசு லேசு ஆகிருக்கும்..

 நீ

 இல்லாத 

சொர்க்கம் 

நரகம்..

 

 

நீ

மெதுவாகவே வா

உனக்காக

எத்தனை வருடம்

வேண்டுமானாலும்

சொர்க்கத்தில்

நரக வேதனை அனுபவிக்க

நான் தயார்!!

                                                                                                     (முற்றும்)


Responses

 1. cancer hospital corridor ல ஒரு காதல் கதை
  அதுவும் சந்தோஷ கதை

  கதயில cutshots யுக்தி….

  கவிதைங்க…

  கவித பிடிக்காத மிஸ்ஸஸ்.ஆனந்த்,
  ஆனந்துக்காக முடிவுல கவித சொல்றது….

  // எங்க விட்டேன்?? சரி அத விடுங்க..//
  எல்லோரும் வாழ்கையில இத யூஸ் பண்ணுவாங்க, ஆனா
  கதயோட்டத்த காப்பாத்ற கருவியா யூஸ் பண்ண தவறிடுவாங்க….

  //அவன் அழுதுட்டே…//
  ஆண்கள் வெட்கபடும் தருணம்….(சினிமா பாட்டு) மாதிரி…
  ஆண்கள் அழும் தருணம் பத்தி எழுத ஒரு சில ஆண்களுக்கு தான்
  துணிவு வரும்…

  கை கொடு மக்கா….
  அற்புதம்.

  (பாத்து மச்சி, ப்ளாக்ல சுடணும்னே ஒரு பெரிய கூட்டம்
  கோடம்பாக்கத்துல சுத்துது)

 2. அண்ணே ரொம்ப நன்றி.. உங்க பின்னூட்டம் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசத்த கொடுக்குது.. இவ்வளவு பாராட்டுக்கு இந்த கதை தகுதியானு நானே யோசிச்சுட்டு இருக்கேன்..

  இது சினிமால வந்தா சந்தோஷம் தானே.. (எங்கனே சினிமா காரங்க பாக்கறது? கடையே காத்து வாங்குது!! ஹிட்ஸ்ஸே ரொம்ப ரொம்ப கம்மியா தான் இருக்கு 😦 )

 3. hi buvanesh,
  very touching.

 4. நீ

  அழுதுகொண்டே

  சிரிப்பதால்

  வானவில்லே வருமென்றாலும்

  எனக்கு

  கத்திரி வெயிலே போதும்!!

  nice one…

 5. டேய் , நீ எப்படி இப்படி எல்லாம் எழுதுற ?
  நானும் தான் இருக்கேனே ?
  நான் கொஞ்சம் நாள் இந்த பக்கம் எட்டி பார்க்கவில்லை ..
  அதுக்குள்ளே …போடா ..
  உண்மையில் ஒரு நல்ல க(வி)தை….
  என்னை சீர் தீட்டும் உன் முயற்சி தொடர்ந்தது நடக்க வேண்டும் ..

 6. நட்பு முழுதும் படிச்சுட்டேன் . முதல் பாகம் படிக்கும்போது கதாசிரியரே கவிஞரே-னு கலாய்கனும்னு-தான் நினைச்சேன். ஆனா கலக்கீடீங்க.

  ரொம்ப கனமான விஷயம் இவ்வளவு எளிமையாவும் ரசனையோடவும் சொல்லிருகீங்க. பழைய கரு தான் ஆனா சொன்ன விதம் ரொம்ப ரொம்ப புதுசு.

  மிஸ்ஸஸ் ஆனந்த் வாழ்க்கைல இருந்த நிறைவு இந்த கதைய படித்தபோதும் இருந்தது. வாழ்த்துகள் நட்பு.

 7. நன்றி உமா ஜி !!

  நன்றி திவ்யா ஹரி

  @ மந்திரன்
  என்ன மச்சி நெம்ப பிஸியா.. ரொம்ப நாளா ஆளக்காணோம்?
  //என்னை சீர் தீட்டும் உன் முயற்சி தொடர்ந்தது நடக்க வேண்டும்//
  மச்சி இது ஓவர் தன்னடக்கம்!

  @ பாசாகி
  உன் பாராட்டு என் மனசுக்கு நிறைவா இருக்கு 🙂 ரொம்ப நாளா எதுவும் எழுதல ?

 8. 2nd part kavidaigal and kadai suprb, en manasulayum mindlayum padinchiduchu. enaku irukara oru payakam kadaya padikum bode anda charecters nerla pakaramadiri karpanai paniduven, oru sila nerathula kangal kanlangidum. inda kadai real apdingaramadiri nenachu, en mind yosikudu mrs anand ponapiragu mr anand ennapanuvar, eppadi iruparnu. pls sirikadinga.

 9. நெம்ப நன்றிங்க.. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு..
  நீங்க சொன்னது சிரிக்கற விஷயம் இல்ல.. எனக்கு ரொம்ப பாராட்டு.. கதை உங்களுக்கு ஒரு பிம்பத்த கொடுத்துனா அதவிட வெறிய பாராட்டு இல்ல ! நன்றி !!

 10. //@ பாசாகி
  உன் பாராட்டு என் மனசுக்கு நிறைவா இருக்கு 🙂 ரொம்ப நாளா எதுவும் எழுதல ?//

  ஹி ஹி நான் ரொம்ப பிஸி :)))

  ரொம்ப நாள் எழுதாட்டி பாசகி, பாசாகி ஆயிட்டேனா? ஆர்வக்கோளார்ல பேரை வைச்சுட்டு அவஸ்தைப்படறேன்யா :)))

  send me a mail natpu.

 11. மாப்பி கலக்கற டா… பினிஷிங் கவிதை அட்டகாசம்… நெறைய சீரியஸ் கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்ட? என்ன ஆச்சு?

 12. முதல்ல சாரிங்க.. கவிதையை எதிர்பார்த்து வந்தேன். 4 ,5 வரிகளுக்கு நடுவுல இருந்த கவிதையை பார்த்துட்டு, “கவிதையை மட்டும்” படிச்சிட்டு நல்லா இருக்குனு “மட்டும்” சொன்னது தப்புங்க.. fulla கதை படிச்சதும் என் மேலேயே எனக்கு வெறுப்பா ஆகிடுச்சி.. இவ்ளோ நல்ல கதையை படிக்காம, வெறும் கவிதையை மட்டும் படிச்சிட்டு போயிட்டேனேனு ரொம்ப வருத்தமா இருக்கு… நல்லா இருக்குங்க கதை, கவிதை ரெண்டும்.. ரெண்டு அன்பு நெஞ்சங்கள பார்த்த திருப்தி.. ஏதோ உண்மையாவே ஒரு பொண்ணுக்கு உடம்பு சரி இல்லையோனு நெனச்சி கடவுள்கிட்ட வேண்டணும்னு தோணுதுங்க.. ரொம்ப, ரொம்ப நல்லா இருக்கு.. நல்லா படைப்பு எவ்வளவு நாள் ஆனாலும் வெளிச்சத்துக்கு வரும்.. கவலை படாதிங்க.. தொடர்ந்து எழுதுங்க.. படிக்க நாங்க இருக்கோம்..

 13. @ saravana

  டேய் நான் எப்ப இதுக்கு முன்னாடி சோகக்கதை எழுதினேன் ?? (நான் எழுதுனா உங்களுக்கு தான் சோகம்!! 🙂 )

 14. @divyahari
  வாழ்த்துக்கு நன்றி திவ்யா.. மனசுக்கு நிறைவா இருக்கு..

  அந்த இடுகை சும்மா கமல் மாதிரி பேச ட்ரை பண்ணுனது.. சோகம் எல்லாம் இல்லை.. நான் விளையாட்டா செஞ்சது இப்படி மாறிருச்சு!! மீண்டும் நன்றி நன்றி நன்றி!!

 15. for reading these itself i feel shld start learning tamil!!! great job!! KUDOS…

 16. //for reading these itself i feel shld start learning tamil!!! great job!! KUDOS…/

  KUDOS without reading ?? I am free only, i will teach you TAMIL (for free) 🙂

 17. நல்ல கதை புவனேஷ் :-). இதை ரெண்டு பகுதியா பிரிக்காம ஒரே பகுதியா குடுத்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்னு தோணுது. மற்ற படி கதை அமைப்பு, கவிதைகள்(கடைசி ௨-3 )
  ரொம்ப நல்லா இருக்கு… முக்கியமா உங்க மொக்கை தொலைந்து விட்டது 🙂 மென்மையான விஷயத்த நல்ல கதையா குடுத்ததற்கு வாழ்த்துக்கள் !!! 🙂

  • கரெக்ட் கிருஷ்ணா.. ஒரே பகுதியா போட்டிருக்கணும்.. மொக்க போயிடுச்சா?? நீங்க அடுத்த போஸ்ட் எல்லாம் படிக்கலையா ?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: