--புவனேஷ்-- எழுதியவை | திசெம்பர் 21, 2009

இந்த விஷயத்தில் ரஜினி வேலைக்காகாது, கமல் தான் சரி


இந்த விஷயத்தில் ரஜினி வேலைக்காகாது, கமல் தான் சரி..   அதுக்காக ரஜினி சார்னால முடியாதுனோ அவர் செய்யறது தப்புனோ நான் சொல்லல! அவர் செய்யறது இல்ல! ஆனா கமல் செய்யறார் அவ்வளவு தான் வித்யாசம்!!

தலைப்புக்கான மேட்டர் சொல்லறேன்! ஆனா அதுக்கு முன்னாடி என்னோட முந்தைய ப்ளாக் பத்தி கொஞ்சம் பேசலாம்.. அது நான் ரசிச்சு ரசிச்சு எழுதுன கதை! இன்னும் ஒரு ரெண்டு வருஷம் கழுச்சு நான் பிளாக்கர்ரா இருப்பனா இல்லையானு எனக்கு தெரியாது. ஆனா கண்டிப்பா ரெண்டு வருஷம் கழுச்சும் இது எனக்கு மனசுக்கு பிடிச்ச கதைல ஒண்ணா இருக்கும்.

மிஸஸ். ஆனந்த் (part – 1)
மிஸஸ். ஆனந்த் (part – 2)

இந்த கதைல “நான் எதிர் பார்த்த மாதிரி கமெண்ட்ஸ் வாங்கல”. நான் சொன்னத சரியா படிங்க. நான் சொன்னது நான் கமெண்ட்ஸ் வாங்காதுனு எதிர்பார்த்தேன், அதே மாதிரி கமெண்ட்ஸ் வாங்கல. கமெண்ட்ஸ் வாங்கணும்னா ஒரு மொக்கை ப்ளாக் போட்டா வரும்! ஆனா நாம ரொம்ப ரசிச்சு, எதிர்பார்த்து எழுதுன ஒரு ப்ளாக்க்கு கம்மியா ஹிட்ஸ் வரும் போது கொஞ்சம் சங்கடமா தான் இருக்கும்.

இருங்க.. இப்ப நான் எதிர்பார்த்த மாதிரி நடந்துச்சா இல்லையானு குழப்பமா இருக்கா? அதான் சொன்னேன் இல்ல.. இந்த மாதிரி விஷயத்துக்கு கமல் தான் சரின்னு.. கமல் பேசி எப்ப யாருக்கு புருஞ்சிருக்கு ?

தலைப்புகானா மேட்டர் என்னனா , ஒரு படம் முடுஞ்சவுடனே ரஜினி அதோட ரிசல்ட் எப்படி இருந்தாலும் டிவில வந்து விளம்பரம் செய்ய மாட்டாரு (எந்திரன்-க்கு வரதா பேச்சு இருக்கு பாப்போம்!), ஆனா கமல் அப்படி இல்ல.. அவர் படத்த அவரே விளம்பரப்படுத்துவாரு. இது ஒரு நல்ல மார்கெட்டிங் ஐடியா! சரி நம்ம கதை சரியா போலையே என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் செல்ப் மார்க்கெட்டிங் ஐடியா வந்துச்சு.. நீங்களே சொல்லுங்க இந்த விஷயத்துல ரஜினி வேலைக்காகாது, கமல் தான சரி ?

இப்படி பட்ட நல்ல ஐடியாவ எனக்கு தெருஞ்சு யாரும் ப்ளாக்ல யூஸ் செய்யல.. அந்த புரட்சிய செய்ய ஆள் நானா இருந்துட்டு போறேன்.. ஏதோ பதிவுலகத்துக்கு நம்மால முடுஞ்சது!!

பின்குறிப்பு:
1) நோ நோ ரஜினி, கமல் ரசிகர்கள் கோவப்படகூடாது..
2) இந்த விளம்பரம் வொர்க் அவுட் ஆகலைனா, இந்த விஷயத்தில் ராஜ் டிவி வேலைக்காகாது, சன் டிவி தான் சரி னு ஒரு ப்ளாக் இல்ல இல்ல அரை மணிநேரத்துக்கு ஆறு ப்ளாக் எழுதற ஐடியா இருக்கு.. அதனால மரியாதையா படிச்சுட்டு கமெண்ட் போடுங்க மக்களே!


Responses

 1. உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

  உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
  ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

 2. கலக்குற மக்கா….
  நான் ரொம்ப ரசிச்சது
  ரஜினி…கமல்…மார்கெட்டிங்…செல்ஃப் மார்க்கெட்டிங்…
  அந்த லிங்…அருமை….

  ஆனா ரொம்ப ரொம்ப ரசிச்சது
  //இந்த விஷயத்தில் ராஜ் டிவி வேலைக்காகாது, சன் டிவி தான் சரி//
  ஹா…ஹா…ஹா….

  மத்தபடி, மிஸஸ் ஆனந்த் எதிர்பார்த்த அளவு ஹிட்ஸ் வாங்காததுக்கு
  அதோட தலைப்பு காரணமா இருக்கலாம்ங்கறது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
  (அந்த் பார்ட் 1, பார்ட் 2).
  இது எத்தன பார்ட் போகுமோ?, என்ற எண்ணமாக இருக்கலாம்.

  மத்தபடி, மிஸஸ் ஆனந்த் எதிர்பார்த்த அளவு கமெண்ட் வாங்காததுக்கு
  ஒரு மிகச்சிறந்த படைப்பு என்பது நம்மை அதனுள் இழுத்து,
  நம் உணர்வுகளை மாற்றவல்லது, என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
  ஒரு நல்ல காதல் திரைபடத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தால்
  நீங்கள் அதன் லயிப்பிலெயே சில மணி நேரம் இருப்பீர்களா?
  அல்லது அங்கே கருத்து கேட்க யார் இருக்கிறார்கள் என தேடி சென்று
  மைக்/கேமரா பார்ட்டிகளிடம் கருத்தை பதிவு செய்து கொண்டிருப்பீர்களா?

  மிஸஸ் ஆனந்த் மிகக்குறைந்த பின்னூட்டங்கள் பெருவதே அதன் சிறப்பிற்கு ந‌ன்று என்பது என் தனிப்பட்ட கருத்து.

 3. எனக்கும் அப்படி நடக்கும் ..
  உனக்காக சில கதைகள் ..
  மற்றவர்களுக்காக சில மொக்கைகள் ..
  இதுதான் விதி …
  வேற என்ன சொல்ல ?

  • மச்சி இது சும்மா ஒரு குறும்புக்காக செஞ்சது (ஆனா அதுல சொன்ன விஷயம் உண்மை தான்!)!!

 4. நுனில தப்பிச்சுடீங்க நட்பு 🙂

  கதைய படிச்சுட்டு வரேன்.

  • வாங்க நட்பு!! தலைவர் பேர போட்டா தான் உள்ள வறீங்க? உங்கள மாதிரி ஆட்களால தான் அவன் அவன் தலைவர் பேரப்போட்டு பப்ளிக்குட்டி தேடறான் 🙂 !! (ஹி ஹி நான் என்ன சொனேன் !)

   • ஹி ஹி பழகிடுச்சு – நமக்கும் அவங்களுக்கும் 🙂

 5. என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க. நிஜமாவே கதை ரெம்ப நல்லாயிருந்தது. நான் ரெம்பவே ரசித்தேன் .

  நாங்க அதை ரசித்து ஒரு கமென்ட் எழுதினா… அதுக்கு ஒரு பதில் எழுதணும் இல்ல….. அப்போ இன்னும் கொஞ்சம் lively ஆ இருக்கும் என்பது என் கருத்து.
  (சும்மா flat கட்டுற மாதிரி ஒரே பதிலில் @ போட்டு எழுதுவது எல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளமாட்டேன். )

  • வாங்கக்கா.. இனி இப்படி பதில் போடறேன்.. flat எல்லாம் கட்டளை 🙂
   //அப்போ இன்னும் கொஞ்சம் lively ஆ இருக்கும் என்பது என் கருத்து//
   ரைட் அக்கா!!

 6. @ சௌந்தர்
  நன்றி அண்ணே..
  //செல்ஃப் மார்க்கெட்டிங்…// இத செஞ்சுபாக்கலாம்னு சும்மா தோணுச்சு.. அத கொஞ்சம் குறும்பா செய்யனும்னு தான் இப்படி செஞ்சேன்.. மத்த படி மிஸ்ஸஸ் ஆனந்த் கம்மியா ஹிட்ஸ் வாங்குனதுல வருத்தம் எல்லாம் இல்ல!

  //(அதோட தலைப்பு காரணமா இருக்கலாம்ங்கறது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
  (அந்த் பார்ட் 1, பார்ட் 2).)//

  கரெக்ட் அண்ணே 1/2 னு போட்டிருக்கணும்.. தலிப்பா ஏதாவது சினிமா பட்டை போடலாம்னு தான் நினச்சேன்.. அப்பரும் ஏனோ அதப்போடல!

  //என்னுடைய தனிப்பட்ட கருத்து.
  ஒரு நல்ல காதல் திரைபடத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தால்
  நீங்கள் அதன் லயிப்பிலெயே சில மணி நேரம் இருப்பீர்களா?
  அல்லது அங்கே கருத்து கேட்க யார் இருக்கிறார்கள் என தேடி சென்று
  மைக்/கேமரா பார்ட்டிகளிடம் கருத்தை பதிவு செய்து கொண்டிருப்பீர்களா?//

  நான் எதிர்பார்த்த விட பாராட்ட நீங்க ஒருத்தரே கொடுத்துடீங்க! நன்றி நன்றி நன்றி!!

 7. முதல்ல சாரிங்க.. கவிதையை எதிர்பார்த்து வந்தேன். 4 ,5 வரிகளுக்கு நடுவுல இருந்த கவிதையை பார்த்துட்டு, “கவிதையை மட்டும்” படிச்சிட்டு நல்லா இருக்குனு “மட்டும்” சொன்னது தப்புங்க.. fulla கதை படிச்சதும் என் மேலேயே எனக்கு வெறுப்பா ஆகிடுச்சி.. இவ்ளோ நல்ல கதையை படிக்காம, வெறும் கவிதையை மட்டும் படிச்சிட்டு போயிட்டேனேனு ரொம்ப வருத்தமா இருக்கு… நல்லா இருக்குங்க கதை, கவிதை ரெண்டும்.. ரெண்டு அன்பு நெஞ்சங்கள பார்த்த திருப்தி.. ஏதோ உண்மையாவே ஒரு பொண்ணுக்கு உடம்பு சரி இல்லையோனு நெனச்சி கடவுள்கிட்ட வேண்டணும்னு தோணுதுங்க.. ரொம்ப, ரொம்ப நல்லா இருக்கு..
  கடைசி வரைக்கும் mrs.ananth name என்னனு சொல்லாம கொண்டு போனது super..
  நல்லா படைப்பு எவ்வளவு நாள் ஆனாலும் வெளிச்சத்துக்கு வரும்.. கவலை படாதிங்க.. தொடர்ந்து எழுதுங்க.. படிக்க நாங்க இருக்கோம்..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: