--புவனேஷ்-- எழுதியவை | திசெம்பர் 29, 2009

நையாண்டி குடும்பத்தார்


நான் ரொம்ப நாள் முன்னாடி ஒரு பாட்டு பாத்தேன்.. அந்த படத்தோட ஹீரோ ஸ்கூல் டிரஸ் போட்டு டூயட் பாடிட்டு இருந்தாரு… விசாரிச்சா அந்த படத்துல ஹீரோ ஸ்கூல் பையனாம்!! அந்த படத்துல ஹீரோக்கு அப்பா நம்ம மணிவண்ணன் சார்!

அப்பவே எனக்கு ஒரு யோசனை வந்துச்சு.. மணிவண்ணன் சார ஸ்கூல் பையனா நடிக்க வெச்சு ஒரு படம் எடுக்கனும்னு! உண்மைய சொன்னா அந்த ஹீரோவா விட மணிவண்ணன் அந்த கேரக்டர் க்கு பொருத்தமா இருப்பார்! இதுக்கு மேல அந்த படத்த பத்தி பேசுனா, ஏற்கனவே பல ‘தருண‘த்துல சிம்புவையும், விஷாலையும் அந்த படத்துல ஹீரோவா நடிச்ச டைரக்டர் ‘கோபி‘ச்சமாதிரி என்னையும் திட்டுவார்!! (ஐயோ பாருங்களேன் எனக்கு கிசு கிசு எழுதவும் வருது.. பத்திரிக்கை உலகம் இத நோட் செய்யுமா??)

சரி, இப்ப நான் யோசிச்ச மாதிரி ஸ்கூல் பையனா மணி சார யோசிக்கலைனாலும் அத விட பெட்டரா வெண்ணிறாடை மூர்த்தி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் மூணு போரையும் காலேஜ் பையானா போட்டு ஒரு படம் எடுக்கறாங்க!! பேரு தமிழ் படம்”!! புதிய முயற்சி!! தனிமனித தாக்குதல் இல்லாம நகைச்சுவை மட்டும் இருக்கும்னு நம்புவோம்!! (அப்ப இத்தன நேரம் நீ தருண் கோபிய செஞ்சது என்னனு கேக்கறீங்களா??)

இந்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காம, இயக்குனர்  வேற  வழி  தெரியாம  அழகிரி யோட  பையன  (தயாநிதி அழகிரி) மதுரைல மடக்கி மிரட்டி கைஎல்லுத்து வாங்கிட்டாரு!! (அப்படின்னு தயாரிப்பாளரே சொன்னாரு!!)  

 அடுத்தது நம்ம ஆதித்யா சேனல் விளம்பரம் பாத்தீங்களா.. அதாங்க “ஐ லவ் அதித்யா“னு ஒரு பிகர் வந்து சொல்லும். அப்புறம் ஒரு வெள்ளைகார பொண்ணு வரும்.. ஞாபகம் வந்திருச்சா??

இப்ப எனக்கு ஒரு டவுட்..

அதுல ஏன் தமிழ் பொண்ணு (பாக்க அப்படித்தான் இருந்துச்சு) வந்து இங்கிலீஷ் ல “ஐ லவ் அதித்யானு சொல்லணும்” ஏன் ஒரு வெளிநாட்டு பொண்ணு வந்து “அடித்யா பாருங்கோ..”னு சொல்லணும் ?? (தமிழ் ஆர்வலர்கள் கவனிக்க!!)

 ரெண்டாவது டவுட்: ஏன் இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் நான் மட்டும் செய்யறேன்!!


Responses

 1. :-/

 2. // :-/
  Why Tension ?

  • tension illa pa; varuththam.
   evloo nalla padam….
   paasam, azhuvaachchi, kudumba sanda, school kadal nu…
   hhmmmmm…..
   (yen boss sirikereenga….. 😦 )

   • நான் மணிவண்ணன் சார் நடிக்க யோசிச்ச கதைளையும் இதெல்லாம் இருந்துச்சு.. ( நோ நோ யாரும் அழ கூடாது!)

    புத்தாண்டு வாழ்த்துக்கள் !

 3. பாஸ், எனக்கும் அதே டவுட், எப்பிடி நீங்கமட்டும் இப்பிடிஎல்லாம் யோசிக்கறீங்க.
  ஒரு ப்ளாக் பயங்கர பீலிங்க்ஸ்அ இருக்கு இன்னொன்னு மொக்கையா இருக்கு,அப்பறம் காமெடி ..இதுதான் “versatile” ஒ? …..

 4. “ஏன் இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் நான் மட்டும் செய்யறேன்!!”

  idhai continue pannu……..
  doctrate vaangidalaam!

 5. நையாண்டி குடும்பத்தார்

  eppudi ellam yosikkiraanga paarungappa!

 6. உன்னால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும் ..
  போன ஜென்மத்தில நாங்க நெறைய பாவம் பண்ணி இருப்போம் அப்படின்னு நெனைக்கிறேன் ..

  • ஏன் மந்திரா.. இந்த கருமத்தை எல்லாம் படிக்க வேண்டி வந்திருச்சா ??

 7. ஸ்ரீ எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்!!

  நன்றி சுரேஷ்

 8. கண்மணி நல்லப் பிள்ளையா இருப்பாள்.. திடீர்ன்னு எதையாவது பண்ணி… நான் கோபப்பட்டால்… “அம்மா இது சின்ன சேட்டை … இதுக்கெல்லாம் நீ கோபப்படக்கூடாது ” என்று ஐஸ் வைப்பாள்.
  அது மாதிரி என் மனதை நானே சாந்தபடுத்தி கொண்டேன்.

  • அக்கா, நீங்க என்ன சொல்லறீங்களா இல்ல தமிழ் படம் எடுக்கற பசங்கள சொல்லறீங்களா?? (ரெண்டாவதுனா, வெட்டுக்கு ஆட்டோ வரும், பாத்துகோங்க! )

 9. ஐயோ பாருங்களேன் எனக்கு கிசு கிசு எழுதவும் வருது.. பத்திரிக்கை உலகம் இத நோட் செய்யுமா??)

  கிசு கிசு எல்லாம் இருக்கட்டும்… இப்போ பதிவுலகை கலக்குற நற்குடி பிரச்சினைக்கு நீ ஒரு நல்ல தீர்ப்பை சொல்ல ஒரு பதிவு போடு மச்சி…

  • வாடி மாப்ள.. இத சொல்லத்தான் இத்தன நாள் பதிவு பக்கமே வராம இருந்து வந்தியா? !!

   இந்த புத்தாண்டில் இங்கிலீஷ் காரன் மீண்டுனம் உயிர் பெற வாழ்த்துக்கள் !!

 10. பதிவு பக்கம் எல்லாம் வந்து போய்கிட்டு தான் இருக்கோம்…
  மற்ற படி இங்கிலீஷ்காரன் எப்போதுமே முழிச்சுகிட்டு தான் இருக்கான்.

  • சரி மச்சி.. சீக்கிரம் பதிவு போடற வழியப்பாரு ! புத்தாண்டு வாழ்த்துக்கள் !

 11. புத்தாண்டு வாழ்த்துகள் மச்சி..
  தொடர்க உன் கலை சேவை…
  🙂

 12. நமக்கு படம் பத்தி என்ன தெரியும் தம்பி.
  நான் உங்களைத்தான் சொன்னேன் (ஆட்டோ என்ன ஒரு கொசுவை கூட அனுப்பமாட்டீங்கன்னு தைரியம் தான்)

  //மற்ற படி இங்கிலீஷ்காரன் எப்போதுமே முழிச்சுகிட்டு தான் இருக்கான்.

  அப்படியா?…

  • இப்படி எல்லாம் நீங்க பேசுனா நான் அழகிரி அண்ணன் இருக்கும் இரும்பு கோட்டையில் ஐக்கியம் ஆகா வேண்டி வரும் !!

 13. வேற ஒன்னுமில்ல…. மூக்கு புடைப்பா இருந்தா அப்படித்தான் யோசிக்கச் சொல்லும்….

 14. HI Buvanesh,
  very funny
  HAPPY NEW YEAR TO YOU AND YOUR FAMILY.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: