--புவனேஷ்-- எழுதியவை | ஜனவரி 12, 2010

ஆர்டர்.. ஆர்டர்.. நீ உருப்படமாட்ட!!


செல்லம் நல்லாப்படி டா..

பார்த்தசாரதிய பாரு.. எப்படி படிக்கறான்.. நீயும் தான் இருக்கியே..

பார்த்தசாரதிய பாத்தாவே ‘இது படிக்கற புள்ளை”னு தெரியுது.. நீயும் அவன் கூடாததான சுத்தற ?

டேய்.. இது மத்த எக்ஸாம் மாதிரி கிடையாது.. பப்ளிக் எக்ஸாம்.. நல்ல மார்க் எடுத்தா தான் உருப்பட முடியும்!!

படிக்கற புள்ளைங்க எல்லாம் கம்ப்யூட்டர், பயோலஜி னு.. என்னென்னமோ பேசறாங்க.. இத மட்டும் பாரு ஆர்ட்ஸ்.. இதெல்லாம் ஏன் தான் எனக்கு பொறந்ததோ?

இங்க பாரு.. பார்த்தசாரதி எப்படி காலேஜ் போறான்.. அவன் டக்-இன் செஞ்சுட்டு போறத பாத்தாவே பெரிய ஆபிசர் மாதிரி இருக்கு.. இந்த சனியனையும் பாரு! கடனுக்கு காலேஜ் போறான். காசு தான் தண்டம். ஆமா அவன் B.A படிக்கறானா இல்ல B.Com படிக்கறானா ?

இதை எல்லாம் ஒரு டிகிரி படிக்க வெச்சதே பெருசு.. இதுல ரெண்டாவது டிகிரி வேற கேடா? அப்படியே படிக்க வெச்சா மட்டும் அந்த பார்த்தசாரதி மாதிரி லட்சம் லட்சமா சம்பாதுச்சு கிழிப்பியா??

படிக்கும் போதே சங்கம், போலீஸ் ஸ்டேஷன்.. சத்தியமா சொல்லற நீ என்ன நிம்மதியா சாக விட மாட்ட.. நான் சாகற காலத்துல கோர்ட் படி ஏறி எறங்கி அல்லாடாப்போறேன்!!

ஆர்டர் ஆர்டர்.. த கோர்ட் இஸ்  நவ்  அட்ஜர்ண்ட்!

நீங்க ஏம்பா இங்க வந்தீங்க..

ஒன்னும் இல்ல பா.. நம்ம பார்த்தசாரதி வழக்குக்கு இன்னைக்கு தீர்ப்புன்னு சொன்னாங்க.. அதான் என்ன சொல்லறனு பாக்க வந்தேன்!

Advertisements

Responses

 1. ஏன்டா , இப்படி சும்மா இருக்குற மூளையை சுண்டி விடுற ?
  கதை நல்லா இருக்கு ..

 2. “ஆர்டர் ஆர்டர்.. த கோர்ட் இஸ் நவ் அட்ஜர்ண்ட்!” idhu namma hero thaane?

  “நீங்க ஏம்பா இங்க வந்தீங்க.. ” idhuvum hero thaanae?
  eppadi kandu pudichom paathiyae!!!1

  payapulla ennamaa yosikkudhu

  • கரெக்ட் தல.. எனக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன் !

 3. நல்லாயிருக்கே. இன்னும் சிறப்பாக்க முயற்சி பண்லாம் 🙂

 4. ஏம்ப்பா படிக்கிற புள்ளங்க மேல உள்ள கடுப்பு தீந்திடுச்சா .

  • அப்ப நீங்க நாட்டுல இருக்கற ஜட்ஜ் எல்லாம் நல்லா படிக்காதவங்கனு சொல்லறீங்களா ?

 5. avvvvvvvvvv

 6. //அப்ப நீங்க நாட்டுல இருக்கற ஜட்ஜ் எல்லாம் நல்லா படிக்காதவங்கனு சொல்லறீங்களா ?

  இந்த கேள்விய நான் தான் தான் கேட்டிருக்கணும் தம்பி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: