--புவனேஷ்-- எழுதியவை | ஜனவரி 19, 2010

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்


இன்னைக்கு என்னனு தெரியல நீலகிரி எக்ஸ்பிரஸ் ரொம்ப சீக்கிரம் வந்துருக்சு.. இன்னும் இருட்டு கூட கலையல அதுக்குள்ள வந்திருக்சு! கோவை காத்து சில்லுனு வீசுது.. என்ன வேணா சொல்லுங்க சொந்த ஊரு காத்தே சுகம் தான்!! இருட்டுல கூட பொண்ணுங்க அழகா தான் இருக்காங்க.. நேத்து இதே பொண்ணுங்கல சென்னைல பாத்தேன்.. இவ்வளவு அழகா இல்ல! ஹ்ம்ம்.. ஊரு காத்து மாதிரி ஊரு லூக்கும் சுகம் போல!!

நானும் பாக்கறேன் எல்லா பொண்ணயும் கூப்பிட அவங்க வீட்ல இருந்து யாராவது வந்திருக்காங்க.. நானும் தெரியாம தான் கேக்கறென் பசங்க எல்லாம் தேவை இல்லாம ஊருக்கு வந்திட்டு போரமா ?? எங்கள வந்து கூப்ப்ட்டா.. சரி விடுங்க!!  இதை எல்லாம் பேசுனா ஆணாதிக்க வாதினு சொல்லுவாங்க! நமக்கு ஏன் வம்பு ?

பசங்க எல்லாம் நேரா டீ கடைக்கு போராங்க.. நானும் போய் ஜோதில ஐக்கியம் ஆகறேன்..

இந்த நேராதுல கூட இங்க யாரோ ஒரு அம்மா.. ஒரு ஒருத்தரையும் பாத்து ஏதோ  கேக்கற மாதிரி வாய் அசைக்கராங்க.. சிலர் எதுவும் சொல்லல. சிலர் எதோ சொன்ன மாதிரி வாய் அசைக்கராங்க.. கலைக்கும் மட்டும் இல்ல பிச்சைக்கும் மொழி இல்ல போல!!  சிலர் அவங்க  முகத்த கூட பாக்காம வெறும் கைய மட்டும் ஆட்டறாங்க.. அவங்களுக்கு இந்த புறகணிப்பு கஷ்டமாவே இல்லையா? இல்ல பழக்கம் ஆகிருச்சா?

பிச்சை எடுக்கறதே கலைனு எல்லாம் அந்த அம்மா இருந்த கோலத்த பாத்தா கிண்டல் செய்ய தோனாது. அந்த நேரம் மெதுவாக விடிய தொடங்கி இருந்தது! நான் பயந்தது நடந்துருக்சு.. அந்த அம்மா என் கிட்ட வந்துட்டாங்க.. அவங்கள பாக்காம நிக்கறேன். அந்த அம்மாக்கு கஸ்டமர் சர்வீஸ் பத்தி எல்லாம் கவலை இல்லை போல..

ஐயா.. சாமி..

(அவரை பார்த்தேன்)

(காலையில் இருந்து நான் தான் அவங்கள பார்த்த மொதல் ஆளு போல.)பசிக்குதுப்பா..

டீ வாங்கிதரவா.. அண்ணா ஒரு டீ கொடுங்க ..

ஒரு கப் டீ ஒரு ப்லஸ்டிக் குப்பில் வந்தது.. கும்பிட்டவர் எங்கோ சென்றார்.

என் நினைவில் மட்டும் இருந்தார்.. அங்க நிக்க எனக்கு பெருமையா இருந்துக்சு.. அந்த இருட்டுலையும் மக்கள்  என்னையவே பாக்கற மாதிரி நெனப்பு.. என் சட்ட காலர்ற தூக்கிவிடலாம்னு பாத்தா இன்னைக்கு பாத்து நான் டி-ஷர்ட் போட்டிருக்கேன்.. ச்சே ஜஸ்ட் மிஸ்!!

அப்படியே வீடு போக பஸ்  ஏறினேன்.. “ஏம்பா சரியான சில்லறை கொடு” னு நடத்துனர் பாடம் நடத்துனார்! கிட்ட தட்ட அந்த அம்மா கேட்டது தான்.. ஆனா கேட்ட விதம் ரொம்ப வித்யாசம்! அப்படியே தூங்கிட்டேன்.. அப்ப ஒரு கனவு.. கனவு மாதிரியே இல்ல ஆனா கனவு..

அப்படியே என்ன யாரோ கட்டிபிடிக்கறாங்க.. ஒரு ஆள்.. அவங்க  வயிறு வரைக்கும் தான் தெரியுது.. அவங்க வயிறோட என்ன கட்டிகிட்டார்.. பெரிய ராஜா போல.. கிட்ட தட்ட கட்டபொம்மன் சிவாஜி சார் மாதிரி ட்ரெஸ் போட்டுஇருந்தாரு.. அட இது கடவுள் இல்ல.. ச்சே.. இது ஏன் எனக்கு தோனவே இல்ல?? கடவுள் நல்ல உயரம் போல.. நானே அவரு வயிறு வரைக்கும் தான் வரேன் !

சரி கடவுள் மூஞ்சிய பாக்கலாம்னு மெதுவா தலைய தூக்கினேன்.. அதிர்ந்துட்டேன்.. அவங்க மூஞ்சி மட்டும் என் கிட்ட பிச்சை வாங்கினவங்கலொடது..

அதோட கனவு முடுஞ்சிடுச்சு.. எழுந்திருச்சா நான் என்னமோ அவ்ங்க கிட்ட இருந்து ஏதோ வாங்கின மாதிரி ஒரு நெனைப்பு.. ஹ்ம்ம்.. நம்ம கிட்ட “யாசகம்” கேட்டு வரவங்க எல்லாம் கடவுள் போல..

ஹ்ம்ம் .. சரி நான் விஷயதுக்கு வரேன்..

இது வரைக்கும் படிச்சு பீல் ஆனவங்க மட்டும் மேல படிங்க.. இப்பவே  மொக்க கதைன்னு சொல்லறவங்க எஸ் ஆகுங்க..

இப்ப நீங்க எல்லாம் என் பேருக்கு காசு அனுப்பி  வெச்சா கடவுளோட புகைப்படம் அனுப்பிவைக்கப்படும் (உங்க கிட்ட உதவி வாங்குறா என்னோட படம் தான்.. என்னா இப்ப நான் தான கடவுள்??).. இந்த புகைப்படம் உங்க வீட்டுல இருக்கற படம் மாதிரி கற்பனைல வரஞ்ச ஓவியம் இல்ல!! உன்மையான புகைப்படம்.. இது குறுகிய காலச்சலுகை இல்லை!

 

டிஸ்கி:

நீங்க வகைகள் பாத்து வந்திருக்கணும்.. நான் என்ன செய்ய ?

Advertisements

Responses

 1. //இருட்டுல கூட பொண்ணுங்க அழகா தான் இருக்காங்க.//

  எந்த கண்ணாடி, கண்ணா போட்டு இருந்தாய் ?

  //இது வரைக்கும் படிச்சு பீல் ஆனவங்க மட்டும் மேல படிங்க.. இப்பவே மொக்க கதைன்னு சொல்லறவங்க எஸ் ஆகுங்க..//
  இதை முதலிலே சொல்லி இருந்தால் கொஞ்சம் உசாராக இருந்திருப்பேன்

  கதையின் உள் அர்த்தத்தை உணரமுடிந்தது .

  • ராசா.. இதுல என்ன உள் கருத்து இருக்கு?? எனக்கு புரியலையே ராஜா !!

 2. //அந்த அம்மாக்கு கஸ்டமர் சர்வீஸ் பத்தி எல்லாம் கவலை இல்லை போல..

  நமக்கு இருந்தா இப்படி எல்லாம் பதிவு போட தோணுமா?

  //நம்ம கிட்ட “யாசகம்” கேட்டு வரவங்க எல்லாம் கடவுள் போல..
  கடவுளா இருந்ததாலும் பணம் இல்லன்னா யாரும் மதிக்க மாட்டாங்க.

  • அக்கா.. இப்படி பெரிய பெரிய கருத்தெல்லாம் என்ன மாதிரி சின்ன பசங்க கிட்ட பேச கூடாது !

 3. good post machi


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: