--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 11, 2010

எல்லா சத்தியங்களும் எல்லா தர்மங்களும்


ஹாய்.. ஒரு பதிவர் ரொம்ப நாளா எழுதாம இருந்து எழுதினா ஒரு வசதி இருக்கு.. அதுவும் மொக்கை தான் போட போறோம்னு கமிட் ஆனா ரொம்ப வசதி!
 
அது என்னனா “என்ன தலைப்பு??” னு மண்டைய பிச்சுக்க வேண்டாம்! “நான் ஏன் எழுதல”ன்னு ஒரு பிட்டு போடலாம்! நான் கிட்ட தட்ட அதத்தான் செய்ய போறேன்! யாரு கண்டா அதா செய்யாம கூட போலாம். நான் என்ன முடிவு செஞ்சுட்டா எழுதறேன்? ப்லொவ் ல வரும்..
 
அதுக்கு முன்னாடி சந்தோஷத்த பகிர்ந்துக்கறேன்., நான் எழுதாம இருந்த இத்தனைநாள் என் தளம் ஹிட்ஸ் வாரி கூவிச்சுது.. கிட்ட தட்ட 300 ஹிட்ஸ்.. ஒரு நாளுல இல்ல நாப்பது நாளுல!! யாரோ நாலு பேரு எட்டி பாத்துட்டு போயிருக்கீங்க.. யாருங்க அந்த நாலு பேரு ? அந்த நாலு பேரு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!! (வந்து எழுதிருக்கனான்னு பாத்தீங்களா இல்ல எழுதிருவான்னு பயத்துல பாத்தீங்களான்னு சொல்லுங்க! )
 
 
அப்புறம் இத்தனாள் ஏன் எழுதலன்னு சென்னை,கோவை, திருப்பூர், பெங்களூர், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, நைஜீரியா ல இருந்து போன் செஞ்சும் மெயில் அனுப்பியும் கேக்காமா சனியன் தொலஞ்சுதுனு இருந்த அத்தனை பேருக்கும் நன்றி! சத்திரியனுக்கு சாவே இல்ல ! (அப்ப சனியனுக்கு  சாவிருக்கா??)
 
சரி எழுத வேண்டாம் னு ஒதுங்கி இருந்தா , எழுத சொல்லி மிரட்டறாங்க அய்யா.. ஆனா நான் இப்ப எழுதறது மிரட்டலுக்கு பயந்து இல்ல.. மொக்க போட இருக்கற ஆர்வத்துல தான்! (நாளைக்கு கலைஞர் காலுல விழுந்து போட்டோ வேற எடுக்கணுமா? அய்யோ அய்யோ !!)
 
சரி இப்ப நான் ஏன் எழுதலன்னு சொல்லணும்.. அத லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சொல்லறேன் ..
 

”உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக, ஆழமாக நான் சொல்ல விரும்புகிறேன். சட்ட ரீதி யாக எந்தத் தவறையும் நான் செய்யவில்லை. இந்த இக்கட்டானா நேரத்தில் என்னோடு இருந்த நண்பர்கள், நலம் விரும்பிகள், சிஷ்யர்கள் (இங்கிலீஷ் ல followers !), என்னால்  பயன் பெற்றவர்கள் (இது எனக்கே  ஓவரா தான் இருக்கு!) எல்லோருக்கும் நன்றி! எல்லா சத்தியங்களும் எல்லா தர்மங்களும் உங்களுக்கு புலப்படும்.. அதுவரை அமைதி காக்காமல் கமெண்ட் போடுமாறு கேட்டுகொள்கிறேன்!

Advertisements

Responses

 1. “யாரோ நாலு பேரு எட்டி பாத்துட்டு போயிருக்கீங்க.. யாருங்க அந்த நாலு பேரு ? அந்த நாலு பேரு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!! ”

  ஒருவன் அடியேன்……..வந்தனம்.

  “எல்லா சத்தியங்களும் எல்லா தர்மங்களும்”

  இது டிக் டிக் டிக் படத்தின்…
  “எல்லா ஞாயங்களும் எல்லா தர்மங்களும் எனக்கு தெரியும்” டயலாக் இன் உல்டா..ரைட்டா.

  ஓவர் மொக்கை ஒடம்புக்கு ஆகாது நண்பா….
  செகப்பா அழகா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்…
  சொல்லிட்டேன்…உன் இஷ்டம்…

  சாட்டிங்க்ல போன்ல பேசும் போதெல்லாம் உள்ளூர் இந்திய அகில உலக விஷியமெல்லாம் ஆறா ஓடும்ல…..
  அதுல ஒரு டம்ளர் எடுத்து ப்ளாக் ல ஊத்து மாப்பி…
  அப்புறம் பாரு ஹிட்ஸ்ஸ….

  • யோவ் அந்த நாளுல ஒன்னு நீ தானா..

   அந்த உல்டா எல்லாம் நான் செய்யல. எங்கள் ஆசான் நித்தி ஜி செஞ்சது !

 2. “சட்ட ரீதி யாக எந்தத் தவறையும் நான் செய்யவில்லை”

  சாமியார் டயலாக் எல்லாம் நீ சொல்லாத மாப்பி.

  “அவர் கொட்ட ரீதியாக தவறு செய்து விட்டார்.”

  • இந்த ரைமிங் (அதுவும் இந்த மாதிரி விஷயத்துல!) தான் உன் டச்!

 3. “எழுத சொல்லி மிரட்டறாங்க ”

  இப்படி நீ சொல்லும் போது

  நான் எழுந்து நின்று விசிலடித்து கை தட்டுகிறேன்.

  கரெக்டா…..

  லிங்க் தப்ப போகுது பாருப்பா…..

 4. “வந்து எழுதிருக்கனான்னு பாத்தீங்களா இல்ல எழுதிருவான்னு பயத்துல பாத்தீங்களான்னு சொல்லுங்க!”

  அதில்லைடா….

  இப்பவாவது உருப்படியா எதாவது எழுதிருப்பானோன்னு நினச்சு வர்றது தான்….வந்து எப்பவும் போல பன் வாங்கிட்டு போறதுதான்.

  இதெல்லாம் நமக்குள்ள பழகிருச்சில்ல…

 5. ஏன்டா நண்பா….

  நீ செஞ்ச hot லீலைகளை ஒரு தொடர் பதிவா எழுதலாமே…

  பொண்ணுங்க பேர்ல எல்லாம் வந்து கமெண்ட் போடறேன்….. பயப்படாதே…

  • இது உனக்கே ஓவரா இல்ல? நான் செஞ்ச ஹாட் லீலைனா.. நாம காளான் சாப்பிடும் போது சூட சாப்ட்டு நாக்க பொல்லிக்கிட்டத தான் சொல்லணும் !!

   //பொண்ணுங்க பேர்ல எல்லாம் வந்து கமெண்ட் போடறேன்….. பயப்படாதே…//

   அப்படியாவது எனக்கு பொண்ணுங்க கமெண்ட் வரட்டும் ..

 6. கடைசியில காரணத்த மாத்திரம் சொல்லல்ல .

  //வந்து எழுதிருக்கனான்னு பாத்தீங்களா இல்ல எழுதிருவான்னு பயத்துல பாத்தீங்களான்னு சொல்லுங்க!

  இது ரெம்ப அவசியமா?

  //அப்புறம் இத்தனாள் ஏன் எழுதலன்னு சென்னை,கோவை, திருப்பூர், பெங்களூர், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, நைஜீரியா ல இருந்து போன் செஞ்சும் மெயில் அனுப்பியும் கேக்காமா சனியன் தொலஞ்சுதுனு இருந்த அத்தனை பேருக்கும் நன்றி!

  ஏம்பா ஒரு நாடு மிஸ் ஆகுது?

  //எல்லோருக்கும் நன்றி! எல்லா சத்தியங்களும் எல்லா தர்மங்களும் உங்களுக்கு புலப்படும்.. அதுவரை அமைதி காக்காமல் கமெண்ட் போடுமாறு கேட்டுகொள்கிறேன்!

  முடியல…

 7. //யாரு கண்டா அதா செய்யாம கூட போலாம்.//னு சொன்னோம் இல்ல ?

  இல்ல அக்கா. குவைத் ல இருந்து நீங்க தான் கேட்டுடீங்க இல்ல ? அதான் போடல!!

 8. what a comeback…
  😉


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: