--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 18, 2010

சொந்த கார்


ஹாய்.. நான் சௌந்தர்.. செல்லமா வட்டி!! பேர பாத்து நான் ஏதோ வசூல் ராஜா கிட்ட வேல செய்யறதா நெனச்சுக்காதீங்க! நான் ஜெமினி படத்துல வர கிரண் மாதிரி! அதாவது சேட்டு!

நீங்க என்ன சௌந்தர், வட்டி, சேட்டு னு எப்படி வேணா கூப்பிடுங்க.. ஆனா வட்டி சேட்டுனு மட்டும் கூப்பிடாதீங்க. அப்படி கூப்பிட்டா என் மனசுக்கு ஒத்துக்காது!! காரணம் சாதாரண காரணம் இல்ல.. ரெண்டு தலைமுறையா எங்க மனசுல முள்ளா குத்தற விஷயம்!!

படுபாவி தமிழ் சினிமா! எங்க வாழ்க்கைல மண்ணள்ளி போட்டுருச்சு!

எங்க தாத்தா அந்த காலத்துலையே நல்லா தமிழ் பேசுவார். இந்த தமிழ் சினிமா சேட்டு னா “ஹரே.. நல்லா இருக்குதா ” னு கேக்கறவங்கள தான் சேட்டுனு நம்ப வெச்சிருக்கு. எங்க தாத்தா நல்லா தமிழ் பேசுனதால அவர யாரும் சேட்டு னு நம்பல. அதுனால எங்களுக்கு வட்டி தொழிலும் போச்சு, அந்த கஷ்டத்துல எங்க தாத்தாவும் போய்டாராமா! போறதுக்கு முன்னாடி சுத்தமா தமிழ் பேசாத சேட்டு பொண்ணா பாத்து எங்க அப்பாக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிட்டு போயிருக்காரு!

முதல் காரணம் பிளாஷ் பேக்னா ரெண்டாவது காரணம் பயம். சோட்டா சேட்டு, படா சேட்டு, பாண் * சேட்டு (படம் பாக்கும் போது இந்த இடத்துல “கீன்” னு சத்தம் வரும்.. அதுக்கு தான் அந்த * ) னு ஏற்கனவே தமிழ் சினிமால நிறைய ரவுடி இருக்காங்க. நீங்க வட்டி சேட்டு னு கூப்ட்டு யாரவது காதுல விழுந்தா அதுத்த படத்துல அப்புறம் வில்லனுக்கு அந்த பேரு தான்!

சரி என்னோட லட்சியம் என்ன தெரியுமா? சொந்தமா ஒரு கார் வாங்கணும்.. அதுவும் வட்டிக்கு விடாம உழைச்சு வாங்கணும்! என்னோட நட்பு வட்டத்துக்கு எல்லாம் இந்த லட்சியம் தெரியும்!

போன மாசம் கூட இந்த சுந்தர் ஒரு கார் வாங்குனான். அதுல இருந்து அவன் இம்ச தாங்க முடியல. கார் வாங்கணும்னா தண்ணி அடிக்காத, தம் அடிக்கத, பொறுப்பா நடந்துக்கோ னு ஆயரம் அட்வைஸ். அவனுக்கு அவன் அப்பா பாதி காசு கொடுத்திருக்காரு, ஆனா நான் சொந்தமா என் காசுல வாங்கனும்னு இருக்கேன்!

நம்ம சுப்பிரமணி அண்ணன் வொர்க் ஷாப் ல சொல்லிருக்கேன். அறுபது ஆயரதுக்கு ஒரு வண்டி வந்திருக்கு, வாங்கி உன் லட்சியத்த முடிச்சுக்கோ னு சொன்னார், நான் ஒத்துக்கல. நான் கேட்டது சான்ட்ரோ. அது ஒரு லட்சமாம். என்ன செய்யறதுன்னு யோசிக்கணும்.

ஐயோ. யோசிக்கலாம்னு தனியா வந்தா இந்த சுந்தர் வந்திருக்கானே. இப்ப எல்லாம் பாத் ரூம் போனாலும் கார்ல தான் போவான் போல. கூட வேற ஒரு தூம கேதுவ கூட்டிட்டு வருதே. இரு இரு இன்னும் கொஞ்ச நாள்ல நானும் கார்ல படம் போடறேன் னு மனசுல நினைக்கறதுக்குள்ள

ஹாய் டா மச்சி

சொல்லு சுந்தர்

என்னடா ஒரு மாதிரி இருக்க

ஒன்னும் இல்ல.. இவரு யாரு ?

என்னோட சித்தப்பா டா.. சொந்தம் தான் டா நமக்கு எல்லாம்.. அதான் கார் வாங்குன சந்தோஷத்த அவங்க கூட பகிர்ந்துக்கறேன்.

அவன் இப்படி எனக்கு அட்வைஸ் செஞ்சது, கார் வாங்குன திமிர். கார் வாங்குனதுல இருந்து எனக்கு தினமும் இப்படி தான் “தினம் ஒரு அட்வைஸ்” இல்லனா “தினம் தினம் செய்தி “. எனக்கு இன்னைத்த கோட்டா முடுஞ்சுது.. இனி வீட்டுக்கு போக வேண்டியது தான்.

போனா வீடே அமைதியா இருந்துச்சு. என் மனசு மட்டும் சத்தம் போட்டுச்சு. நேரா என் ரூம்க்கு போனேனேன். என்ன யோசிக்கறதுனு என் மனசு கூட சண்ட போட்டுட்டு இருந்தேன்.

அம்மா வந்தாங்க. அவங்க தம்பிக்கு ஏதோ கோளராமா.. சரி செய்ய நான் கார் வாங்க சேத்தி வெச்சிருந்த காச கேட்டாங்க. எனக்கு சுந்தர் கார் மனசுல வந்து வந்து போச்சு.. அழுகை வந்துச்சு. கோவம் வந்துச்சு.. கடைசியா சுந்தர் சொந்த காரங்களா பத்தி சொன்னது ஞாபகம் வந்துச்சு..
மாமா வா? காரா ? அட எனக்கு இப்ப தான் என் மாமாக்கு உடம்பு சரியில்ல னு தோணுது.. இத்தனை நேரம் அம்மா தம்பி னு தான நெனச்சேன் ??

இப்ப எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. சொந்த காரரா? சொந்த காரா ?

நான் என் முடிவ அம்மா கிட்ட சொன்னேன்.

அவங்க வெளிய போய்
அவனுக்கு சொந்த கார் தான் முக்கியம்னு சொன்னாங்க

உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நெனைக்கறேன் எங்க அம்மாக்கு நல்லா தமிழ் பேச வராது. அவங்க பாஷைல சொல்லனும்னா ஹரே.. உன்க்கு சொந்த கார் வேணுமா? இல்லே சொந்த கார் வேணுமா னு நீயே முடிவு செஞ்சுக்கோ”

Advertisements

Responses

 1. நீங்க சொந்தக்காரர் அதனால கதை பிடித்திருக்கிறது. கார் ல வீட்டுக்கு வாங்க…!

  • வாங்க சரவணன்!! கார்ல தான் வரணுமா? அப்ப கொஞ்சம் லேட் ஆகும் பாரவலையா?

 2. //எதோ என்னால முடிஞ்சது, கதை, கொலைவெறி, சண்டைக்கு வராதீங்க, முடியலடா சாமி, மொக்கை இல் பதிவிடப்பட்டது

  அப்ப தெரிஞ்சிதான் இப்படி ஒரு கதையை எழுதியிருக்கீங்க .
  இருந்தாலும் எழுதி எனக்கு கம்பெனி குடுக்கிரதுக்காக சும்மாவிடுகிறேன் .

  • தெருஞ்சு தான் அக்கா.. என்ன செய்யறது ? கமிட் ஆகிட்டோம் இல்ல ?

 3. //நான் கேட்டது சான்ட்ரோ. அது ஒரு லட்சமாம்.
  🙄 🙄 🙄
  இது எப்போ ? எங்கே? 🙄

  சொல்லவே இல்ல 🙄


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: