--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 24, 2010

தங்க வேட்டை — ஒரு புதிர் !!


சும்மா ஒரு புதிர் படுச்சேன்.. வொர்க் அவுட் ஆச்சுனா நிறைய கேக்கறேன்!!

அஞ்சு திருடர்கள் (அப்புறம் அரசியல்வாதிகளுக்கு மரியாத முக்கியம் இல்ல? ) இருக்கீங்க.. கரெக்ட் நீங்களும் ஒரு திருடர். நீங்க எல்லாம் சேந்து நூறு தங்க பிஸ்கட் அபேஸ் செஞ்சுட்டீங்க!! இப்ப உங்களுக்குள்ள பங்கு பிரிக்கறதுல பிரச்சனை.. உங்க பாஸ் ஒரு வழி சொல்லறார்!! ஒரு ஒருத்தரா எப்படி பங்கு பிரிக்கரதுனு ஐடியா சொல்லணும்.. சொன்னவுடனே ஓட்டெடுப்பு நடக்கும்.. மெஜாரிட்டி (>50%) இல்லைனா ஐடியா சொன்னவன போட்டு தள்ளீட்டு அடுத்தவன் கிட்ட ஐடியா கேப்பாங்க.. திரும்பவும் ஓட்டெடுப்பு!! திரும்பவும் மெஜாரிட்டி!!

அதாவது நீங்க மொதல்ல ஐடியா கொடுத்து.. அந்த ஐடியா மூணு பேருக்கு புடிக்கலைனா.. நீங்க காலி!!

இப்ப நீங்க தான் ஐடியா கொடுக்கணும்! அப்படீனா உங்களுக்கு எத்தன தங்க பிஸ்கட் கிடைக்கும்??

குறிப்பு:

எல்லா திருடர்களும் அறிவாளிகள்.. எத்தன முடியுமோ அத்தன எடுக்க பாக்கறாங்க..
யாருமே மத்தவனுக்கு தரணும்னு நினைக்கல!!

வாழ்த்துக்கள் !!

Advertisements

Responses

 1. எப்படியும் தனக்குத் தான் அதிகம் கிடைக்கனும்னு நினைப்பாங்க.. அதனால் எவன் முதலில் ஐடியா கொடுத்தாலும் அதுக்கு எதிர்ப்பா மத்தவங்க சொல்லி அவனைக் காலி பண்ணிடுவாங்க.. முதலில் சொல்பவர்கள் காலியாகி விடுவார்கள்… அதனால் நோ பிஸ்கட்டு..

 2. அவ்…அவ்… என்னாது இது சின்ன புள்ளத்தனமா இருக்கு… சேர்ந்து திருடிட்டு, அடுத்த ஆளை போட்டுத்தள்ள வழி கண்டுபிடிச்சா என்னா அர்த்தம் இது… அவ்…

 3. இந்த ஆட்டைக்கு நான் வரவில்லை… யப்பா எல்லோரும் சேர்ந்து எதாவது கொடுக்கிற கொடுங்க அப்படின்னு வாங்கிட்டு அங்கே இருந்து ஓடிட வேண்டியதுதான்.

 4. முதல்ல எவனுமே தான் சாக விரும்ப மாட்டான். ரைட்டா?

  அப்புறம் நண்பா 5 பேரு எந்த வரிசையில ஐடியா கொடுப்பாங்க?

  அதாவது யாரு முதல் ஐடியா, யாரு இரண்டாவது, மூன்றாவது ………………ஐந்தாவது…இப்படி?

  • அதையெல்லாம் முடிவு செஞ்சு.. நீ தான் ஐடியா கொடுக்கணும்னு சொல்லீட்டாங்க!

 5. ஏன் கேக்கறன்னா….

  வரிசை முறை கண்டிஷன் இல்லைனா…..

  “ஏங்க நீங்க சொல்லுங்க..”
  “ஏன் உங்கள் கேக்கலயா… நீங்க சொல்லுங்க”னு

  இப்படி காமெடி ஆகிப்போகும்?

 6. மாப்பி….

  கேள்வி வேற ரொம்ப சுளுவா கொடுத்திருக்கியா…….

  பத்தாகுறைக்கு இப்படி உள் குத்து வேறயா….????????

  இதனால தலைய பிச்சிக்கிட்டு யோசிச்சதுல அங்க முடி தீர்ந்து போய் வேற எடம் துலாவிகிட்டிருக்கேன்?

  சந்தேகத்த தீர்த்து வைப்பா???

  • ராசா.. இதுக்கு நான் பதில் சொல்லலாம்.. ஆனா அது அச்சில் ஏறாது !

 7. A=முதலாவது
  B=இரண்டாவது
  C=மூன்றாவது
  D=நான்காவது
  E=ஐந்தாவது
  என்று ஐடியா கொடுப்பவர்களை வரிசை முறையாக வைத்து கொண்டால்…..
  கொண்டால் என்ன………. வைத்துக்கொள்கிறோம்.

  முதலில் A =ஆளுக்கு இருபது கட்டிகள் என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்…..உடனே B,C,D,E நால்வரும் இந்த ஐடியா வை எதிர்த்து A வை கொன்று விடுவார்கள். ஒரு பங்கு குறையுமே!

  இரண்டாவது B= ஆளுக்கு 25 கட்டிகள் என்று ஐடியா சொன்னாலும் மீதி மூவரும் பங்கை குறைக்க இதை ஒப்புக்கொள்ளாமல் B யை கொன்று விடுவார்கள்.

  இப்படியே போனால் கடைசியில் கடைசி நான்காவது மற்றும் ஐந்தாவது ஐடியா கொடுக்க வேண்டிய D & E மட்டுமே இருப்பார்கள். ஓகே வா.

  இப்போது D யின் முறை.

  இங்கு மெஜாரிட்டி பார்க்க இயலாது. காரணம் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். 50-50.

  D =இவர் என்ன சொன்னாலும் அதுவே இறுதி முடிவு.
  50-50 என்றாலும், எனக்கு 100 உனக்கு (E) ஊ…. என்றாலும் வேறு வழியில்லை.
  தவிர “எல்லா திருடர்களும் அறிவாளிகள்.. எத்தன முடியுமோ அத்தன எடுக்க பாக்கறாங்க..
  யாருமே மத்தவனுக்கு தரணும்னு நினைக்கல!!” என்பதால்
  D 100 கட்டிகள் எடுத்துக்கொண்டு E க்கு ஒன்றும் கொடுக்காமல் S ஆகி விடுவார்.

  • நான் >50% சொல்லீருந்தேன்! அப்படி பாத்தா எல்லாம் E தான் எடுத்துக்குவான்!! இந்த தியரி செல்லாது.. கேள்வி நீங்க தான் முதல்ல சொல்லணும்! A,B,C, எல்லாம் கொல்லமுடியாது (ஏன்னா, முதல் ஐடியா கொடுக்கறதால செத்தா நீங்க தான் சாகனும்! )
   🙂 🙂 🙂

 8. இப்பொழுது இப்படி யோசித்து பார்ப்போம்….

  தற்போது C,D&E மூவர் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.

  இந்த முறை முடிவு எடுக்க வேண்டியவர் C. சரிதானே.
  C சொல்கிறார் “எனக்கு 99, E க்கு=1, D க்கு= 0”.
  காரணம் அனைவரும் மிக மிக புத்திசாலிகள் என்பதால், தன் முடிவு ஏற்க படாவிட்டால் அடுத்து D,E இருவருக்கிடையே ஆகப்போகும் BUSINESS பற்றி C அறிந்து வைத்திருப்பார்…

  ஆகவே ஒன்றும் இல்லாமல் போகப்போகும் E யை தன் வசம் இழுக்க பார்ப்பார். E க்கும் வேறு வழியில்லையே!

  எப்பூடீ……

  யப்பா….இப்பவே முடியலையே…..சாமி..??????

 9. I’M BACK…..

  இப்பொழுது B,C,D&E ஆகிய நால்வர் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.

  தற்போது முடிவு எடுக்க வேண்டிய B, மேலும் தனக்கு பிறகு நடக்க போவதை அறிந்திருக்கும் B (அதாவது C முடிவெடுத்தால் D க்கு பெப்பே) என்ன சொல்வார்.

  “எனக்கு (B)=99, (உனக்கு) D க்கு=1”. அவ்வளவுதான்.

 10. இப்பொழுது ஐவரும் A,B,C,D & E இருக்கிறார்கள்.
  முடிவெடுக்க வேண்டியவர் மதிப்பிற்குரிய (A).
  இவருக்கும் அடுத்து நிகழ போகும் விஷயங்கள் தெரியும்!

  என்னாபா…நீ தானே சொன்னே அல்லாரும் புத்திசாலிகள்’னு????

  சரி இப்போது..

  A என்ன கொடுத்தாலும் B மட்டும் அதை ஏற்க மாட்டார்.
  காரணம் அடுத்து முடிவு அவருடையது.
  SO… அவருக்கு-B க்கு-0 கட்டி.

  E க்கு குறைந்தபட்சம் 1 தங்க கட்டியாவது கொடுத்து SATISFY செய்தாக வேண்டும்.(ஒன்று முதலிலேயே 1 கட்டி, இல்லை கடைசியில் 0. இதுதான் E க்கு விதி).
  ஆக E இதற்க்கு கண்டிப்பாக சம்மதித்து A வை ஆமொதிப்பார்.

  E=1.

  கடைசியாக A க்கு மெஜாரிட்டி கிடைக்க (தன்னையும் சேர்த்து) E யை தவிர மேலும் ஒருவரை – C யை அல்லது D யை – திருப்தி படுத்தியாக வேண்டும். ரைட்டா…

  இப்போ நான் தான் A ன்னு வைங்க…..

  எனக்கு 98 தங்க கட்டிகள் கிடைக்கும்.

  என்ன நண்பா.. இது தானே உன் கேள்வி.

  B=0
  C=1 or (0)
  D=0 or (1)
  E=1.

  இவ்ளோ தான் பா முடியும்………………………………………………………..

  • கிட்ட தட்ட கரெக்ட் நண்பா!! ஆனா ஒரே விஷயம். A வ போட்டு தள்ளுனாலும் எல்லாருக்கும் (C,D,E) அதே தான் கிடக்கும்! சோ, A உயிரோட இருக்கறதால அவங்களுக்கு எந்த லாபமும் இல்ல.. அத போட்டு தள்ளரதால எந்த நஷ்டமும் இல்ல! அதனால போட்டு தள்ள வாய்பிருக்கு!

   அதனால C இல்ல D க்கு ரெண்டு கொடுத்து அவங்கள கரெக்ட் செஞ்சுக்கலாம்! நமக்கு 97 !

   கரெக்ட்டா சொன்ன சுரேஷ் க்கு எல்லாரும் ஜோரா கைதட்டுங்க !

 11. யப்பா புவநேஷு யாரு இந்த சுரேஷு?
  பாவம்….. எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு.

  • பயபுள்ள அறிவாளியா இருப்பான் போல.. நாம எதுக்கும் இவன் கிட்ட ஜாக்கரதையாஇருக்கணும் அக்கா !

 12. if i were in position “E”, i would get all 100.
  for any offer by A, all other 4 would refuse, leading him to death.
  for any offer by B, all other 3 would refuse, leading to his death.
  and so…..finally,
  for any offer by D, (even if he proposes all 100) i will kill him. Becoz, the rule is >50% not = or >.

  If i were in C, i would tell this problem of D getting killed by E as per rule and propose 50 for D and 0 for E.

  if i were A,
  oh…my GOD….

  Sorry, boss. என்னோடது, பிஞ்சு மனசு…..
  நோ கிரிமினல் எண்ணம்….
  அவ்வ்வ்வ்வ்….

  • //என்னோடது, பிஞ்சு மனசு…..
   நோ கிரிமினல் எண்ணம்….//

   என்னா ஒரு கிரிமினல் கமெண்ட் ? 🙂 🙂

 13. அறிவாளியா இருந்தாலும் அப்பாவியா உங்ககிட்ட பலர் சிக்கிவிட்டார்களே தம்பி.
  இன்னுமா நம்மள உலகம் நம்பிகிட்டிருக்கு.

 14. “யப்பா புவநேஷு யாரு இந்த சுரேஷு?
  பாவம்….. எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு.”

  “பாருங்களேன்….இவனுக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கு.”

 15. “இன்னுமா நம்மள உலகம் நம்பிகிட்டிருக்கு.”

  நம்பித்தானே மோசம போயிட்டேன்…

  அட பாவிகளா வேல வெட்டியா விட்டுட்டு யோசிச்சதுக்கு வினைய பாத்தீங்களா.

  ரொம்ப தேங்க்ஸ்.?????

 16. “Sorry, boss. என்னோடது, பிஞ்சு மனசு…..
  நோ கிரிமினல் எண்ணம்….
  அவ்வ்வ்வ்வ்….”

  வாய்யா பிஞ்சு மனசு soundr………

  சௌக்கியமா…..

  32 நாள் தள்ளிருச்சு னு பதிவு போட்டீரே…
  அதுக்கப்புறம் கடை பக்கம் ஆளையே காணோம்.

  என்ன…..maternity leave ஆ…….

  • right, suresh.
   Though you made it in a lighter note.
   in the real sense, we were blessed with a baby boy on march 10.
   i detached myself from all possible (my) personaal engagements to
   take care of my wife.

   • வாழ்துக்கள் ஜி !! எப்போ எங்க ட்ரீட் ??

 17. வாழ்த்துக்கள் சௌந்தர். (அங்கிள்)

  • நன்றி சுரேஷ்.

   @(அங்கிள்)
   அடப்பாவி, நான் பெத்தது பையன்.
   நீ ஏன் என்ன அங்கிள்னு கூபிட்ற…..

 18. //“பாருங்களேன்….இவனுக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கு.”
  ஏம்பா உங்களுக்கு என்ன கோபம் என் மேல். நான் ஒரு குழந்தைக்கு அம்மா. ( I ‘m not a boy)

  @ சௌந்தர்
  வாழ்த்துக்கள். உங்கள் வீட்டு தலைவிக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

  • thanx, kundavai and puvanesh.

 19. helloo puvaneshuuuuu,
  adapaavi ella thangaththaiyum
  nee aataiya pottu
  escape aayittaya…?
  enga rasa pona…?

 20. //helloo puvaneshuuuuu,
  adapaavi ella thangaththaiyum
  nee aataiya pottu
  escape aayittaya…?
  enga rasa pona…?//

  repeatuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu…….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: