--புவனேஷ்-- எழுதியவை | ஜனவரி 19, 2010

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

இன்னைக்கு என்னனு தெரியல நீலகிரி எக்ஸ்பிரஸ் ரொம்ப சீக்கிரம் வந்துருக்சு.. இன்னும் இருட்டு கூட கலையல அதுக்குள்ள வந்திருக்சு! கோவை காத்து சில்லுனு வீசுது.. என்ன வேணா சொல்லுங்க சொந்த ஊரு காத்தே சுகம் தான்!! இருட்டுல கூட பொண்ணுங்க அழகா தான் இருக்காங்க.. நேத்து இதே பொண்ணுங்கல சென்னைல பாத்தேன்.. இவ்வளவு அழகா இல்ல! ஹ்ம்ம்.. ஊரு காத்து மாதிரி ஊரு லூக்கும் சுகம் போல!!

நானும் பாக்கறேன் எல்லா பொண்ணயும் கூப்பிட அவங்க வீட்ல இருந்து யாராவது வந்திருக்காங்க.. நானும் தெரியாம தான் கேக்கறென் பசங்க எல்லாம் தேவை இல்லாம ஊருக்கு வந்திட்டு போரமா ?? எங்கள வந்து கூப்ப்ட்டா.. சரி விடுங்க!!  இதை எல்லாம் பேசுனா ஆணாதிக்க வாதினு சொல்லுவாங்க! நமக்கு ஏன் வம்பு ?

பசங்க எல்லாம் நேரா டீ கடைக்கு போராங்க.. நானும் போய் ஜோதில ஐக்கியம் ஆகறேன்..

இந்த நேராதுல கூட இங்க யாரோ ஒரு அம்மா.. ஒரு ஒருத்தரையும் பாத்து ஏதோ  கேக்கற மாதிரி வாய் அசைக்கராங்க.. சிலர் எதுவும் சொல்லல. சிலர் எதோ சொன்ன மாதிரி வாய் அசைக்கராங்க.. கலைக்கும் மட்டும் இல்ல பிச்சைக்கும் மொழி இல்ல போல!!  சிலர் அவங்க  முகத்த கூட பாக்காம வெறும் கைய மட்டும் ஆட்டறாங்க.. அவங்களுக்கு இந்த புறகணிப்பு கஷ்டமாவே இல்லையா? இல்ல பழக்கம் ஆகிருச்சா?

பிச்சை எடுக்கறதே கலைனு எல்லாம் அந்த அம்மா இருந்த கோலத்த பாத்தா கிண்டல் செய்ய தோனாது. அந்த நேரம் மெதுவாக விடிய தொடங்கி இருந்தது! நான் பயந்தது நடந்துருக்சு.. அந்த அம்மா என் கிட்ட வந்துட்டாங்க.. அவங்கள பாக்காம நிக்கறேன். அந்த அம்மாக்கு கஸ்டமர் சர்வீஸ் பத்தி எல்லாம் கவலை இல்லை போல..

ஐயா.. சாமி..

(அவரை பார்த்தேன்)

(காலையில் இருந்து நான் தான் அவங்கள பார்த்த மொதல் ஆளு போல.)பசிக்குதுப்பா..

டீ வாங்கிதரவா.. அண்ணா ஒரு டீ கொடுங்க ..

ஒரு கப் டீ ஒரு ப்லஸ்டிக் குப்பில் வந்தது.. கும்பிட்டவர் எங்கோ சென்றார்.

என் நினைவில் மட்டும் இருந்தார்.. அங்க நிக்க எனக்கு பெருமையா இருந்துக்சு.. அந்த இருட்டுலையும் மக்கள்  என்னையவே பாக்கற மாதிரி நெனப்பு.. என் சட்ட காலர்ற தூக்கிவிடலாம்னு பாத்தா இன்னைக்கு பாத்து நான் டி-ஷர்ட் போட்டிருக்கேன்.. ச்சே ஜஸ்ட் மிஸ்!!

அப்படியே வீடு போக பஸ்  ஏறினேன்.. “ஏம்பா சரியான சில்லறை கொடு” னு நடத்துனர் பாடம் நடத்துனார்! கிட்ட தட்ட அந்த அம்மா கேட்டது தான்.. ஆனா கேட்ட விதம் ரொம்ப வித்யாசம்! அப்படியே தூங்கிட்டேன்.. அப்ப ஒரு கனவு.. கனவு மாதிரியே இல்ல ஆனா கனவு..

அப்படியே என்ன யாரோ கட்டிபிடிக்கறாங்க.. ஒரு ஆள்.. அவங்க  வயிறு வரைக்கும் தான் தெரியுது.. அவங்க வயிறோட என்ன கட்டிகிட்டார்.. பெரிய ராஜா போல.. கிட்ட தட்ட கட்டபொம்மன் சிவாஜி சார் மாதிரி ட்ரெஸ் போட்டுஇருந்தாரு.. அட இது கடவுள் இல்ல.. ச்சே.. இது ஏன் எனக்கு தோனவே இல்ல?? கடவுள் நல்ல உயரம் போல.. நானே அவரு வயிறு வரைக்கும் தான் வரேன் !

சரி கடவுள் மூஞ்சிய பாக்கலாம்னு மெதுவா தலைய தூக்கினேன்.. அதிர்ந்துட்டேன்.. அவங்க மூஞ்சி மட்டும் என் கிட்ட பிச்சை வாங்கினவங்கலொடது..

அதோட கனவு முடுஞ்சிடுச்சு.. எழுந்திருச்சா நான் என்னமோ அவ்ங்க கிட்ட இருந்து ஏதோ வாங்கின மாதிரி ஒரு நெனைப்பு.. ஹ்ம்ம்.. நம்ம கிட்ட “யாசகம்” கேட்டு வரவங்க எல்லாம் கடவுள் போல..

ஹ்ம்ம் .. சரி நான் விஷயதுக்கு வரேன்..

இது வரைக்கும் படிச்சு பீல் ஆனவங்க மட்டும் மேல படிங்க.. இப்பவே  மொக்க கதைன்னு சொல்லறவங்க எஸ் ஆகுங்க..

இப்ப நீங்க எல்லாம் என் பேருக்கு காசு அனுப்பி  வெச்சா கடவுளோட புகைப்படம் அனுப்பிவைக்கப்படும் (உங்க கிட்ட உதவி வாங்குறா என்னோட படம் தான்.. என்னா இப்ப நான் தான கடவுள்??).. இந்த புகைப்படம் உங்க வீட்டுல இருக்கற படம் மாதிரி கற்பனைல வரஞ்ச ஓவியம் இல்ல!! உன்மையான புகைப்படம்.. இது குறுகிய காலச்சலுகை இல்லை!

 

டிஸ்கி:

நீங்க வகைகள் பாத்து வந்திருக்கணும்.. நான் என்ன செய்ய ?

Advertisements
--புவனேஷ்-- எழுதியவை | ஜனவரி 12, 2010

ஆர்டர்.. ஆர்டர்.. நீ உருப்படமாட்ட!!

செல்லம் நல்லாப்படி டா..

பார்த்தசாரதிய பாரு.. எப்படி படிக்கறான்.. நீயும் தான் இருக்கியே..

பார்த்தசாரதிய பாத்தாவே ‘இது படிக்கற புள்ளை”னு தெரியுது.. நீயும் அவன் கூடாததான சுத்தற ?

டேய்.. இது மத்த எக்ஸாம் மாதிரி கிடையாது.. பப்ளிக் எக்ஸாம்.. நல்ல மார்க் எடுத்தா தான் உருப்பட முடியும்!!

படிக்கற புள்ளைங்க எல்லாம் கம்ப்யூட்டர், பயோலஜி னு.. என்னென்னமோ பேசறாங்க.. இத மட்டும் பாரு ஆர்ட்ஸ்.. இதெல்லாம் ஏன் தான் எனக்கு பொறந்ததோ?

இங்க பாரு.. பார்த்தசாரதி எப்படி காலேஜ் போறான்.. அவன் டக்-இன் செஞ்சுட்டு போறத பாத்தாவே பெரிய ஆபிசர் மாதிரி இருக்கு.. இந்த சனியனையும் பாரு! கடனுக்கு காலேஜ் போறான். காசு தான் தண்டம். ஆமா அவன் B.A படிக்கறானா இல்ல B.Com படிக்கறானா ?

இதை எல்லாம் ஒரு டிகிரி படிக்க வெச்சதே பெருசு.. இதுல ரெண்டாவது டிகிரி வேற கேடா? அப்படியே படிக்க வெச்சா மட்டும் அந்த பார்த்தசாரதி மாதிரி லட்சம் லட்சமா சம்பாதுச்சு கிழிப்பியா??

படிக்கும் போதே சங்கம், போலீஸ் ஸ்டேஷன்.. சத்தியமா சொல்லற நீ என்ன நிம்மதியா சாக விட மாட்ட.. நான் சாகற காலத்துல கோர்ட் படி ஏறி எறங்கி அல்லாடாப்போறேன்!!

ஆர்டர் ஆர்டர்.. த கோர்ட் இஸ்  நவ்  அட்ஜர்ண்ட்!

நீங்க ஏம்பா இங்க வந்தீங்க..

ஒன்னும் இல்ல பா.. நம்ம பார்த்தசாரதி வழக்குக்கு இன்னைக்கு தீர்ப்புன்னு சொன்னாங்க.. அதான் என்ன சொல்லறனு பாக்க வந்தேன்!

--புவனேஷ்-- எழுதியவை | ஜனவரி 6, 2010

ரேப் ‘ஏ சாங்’

இப்ப நான் உங்களுக்கு ரேப் எப்படி செய்யறதுன்னு சொல்லப் போறேன்!

எனக்கு முன்ன பின்ன இப்படி ரேப் செஞ்ச அனுபவம் இல்ல!! ஆனா கேள்வி ஞானம் நிறைய இருக்கு!!  உங்களுக்கும் இருக்கு, ஆனா நீங்க வெளிய சொல்ல மாட்டீங்க.. காரணம் பயம்!! அந்த பயம் எனக்கு இல்ல !!
 
 
என்னடா ஏதோ தமிழ் சினிமா வசனம் மாதிரி இருக்குனு பாக்கறீங்களா?? தமிழ் சினிமா தான்!! 
தமிழ் சினிமால ஆங்கிலத்தின் ஆதிக்கம் இப்ப ரொம்ப அதிகமா இருக்கு.. என்ன பொறுத்த வரைக்கும் இது ஆரம்பிச்சது 80’s ல.. அப்ப இருந்து அது கொஞ்சம் கொஞ்சமா வளந்து வந்துச்சு.. அப்ப எல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை.. இப்ப தான் பிரச்சனை பண்ணறாங்க!!

நான் பிரச்சனை பண்ணறாங்கனு சொன்னது நம்ம சினிமால இருக்குற ஆளுகளத்தான்.. சத்தியமா இவங்க தொல்ல தாங்க முடியோல..

அந்த காலத்துல வசனத்துல தேவை இல்லாம ஆங்கிலம் வரும்.. அப்ப தான் கெத்து.. நான் அது வேண்டாம்னு சொல்லல!! என்னால ஒரு வாக்கியம் கூட ஆங்கிலம் இல்லாம பேசமுடியாது. சைக்கிள், பஸ், ப்ளீஸ், சாரி எல்லாம் இப்ப பேச்சு மொழில வந்திருச்சு.. அத பத்தி இப்ப பேசல. தேவை இல்லாமா ஹீரோ வில்லன பாத்து ஒரு “பீட்டர்” விடுவாரு.. அத இப்ப பாத்தா சிரிப்பா வரும்.

அப்ப எல்லாம் வெறும் வசனம் தான்.. இப்ப பாட்டு! வசனம்னா அங்க படம் பாக்கும்போது மட்டும் தான் தொல்லை. ஒரு தடவையோ ரெண்டு தடவையோ.. அதோட முடுஞ்சுது! அதே பாட்டுனா ??

இப்ப எல்லாம் படத்துக்கு ஒரு பாட்ட ரேப் செஞ்சிடறாங்க.. ஒரு பாட்ட ரேப் செய்யறது ரொம்ப ரொம்ப சுலபம்.. 

சரிங்க, உங்களுக்காக.. ஏதோ என்னோட மொக்க ப்ளாக் எல்லாம் படிக்கறீங்க ங்கற ஒரே காரணத்துக்காக ரேப் எப்படி செய்யறதுன்னு சொல்லப் போறேன்!</!!

ராஜா சார் போட்ட ஏதாவது நல்ல பாட்டு எடுத்துக்கணும்.. டெம்போ கொஞ்சம் அதிகம் வெச்சு பாட்ட பாடா படுத்தனும் .. முக்கியமான விஷயம் பாட்டுல இடைல இடைல பாஸ்ட் ஆக்கணும்.. இப்ப நான் சொன்னது எல்லாம் வெறும் ரேப் மூடுக்கு வரதுக்கு தான்!! அதாவது ராஜா சார் பாட்டு நல்லா பொடவ கட்டிட்டு கையெடுத்து கும்பிட வைக்கற மாதிரி அம்சமா இருக்கும்.. நம்ம மியூசிக் டைரக்டர் என்ன செய்வாருனா அவருக்கு புடுச்ச மாதிரி அந்த பொண்ண.. ச்சி ச்சீ பாட்ட அலங்கோலம் படுத்துவாரு..

இப்ப இடைல இடைல புரியாத ஆங்கில வார்த்தைய வெச்சி ஒரு பாட்டு போடனும்.. கேட்டா ராப்னு சொல்லுவாங்க.. இங்கிலீஷ் காரனுக்கு வேணா அது ராப் சாங்கா இருக்கலாம்.. நம்ம ராஜா சார் பாட்ட ‘பொறுத்த’ வரைக்கும் அது ரேப் சாங்!!
 
அந்த மாதிரி ரேப் செஞ்ச சில பாட்டு எனக்கும் பிடிச்சுது.. அதுக்காக அந்த மாதிரி ஒரு ரேப் சாங் இருந்தாதான் படம் ஓடும்னு சென்டிய போட்டு எடுக்கறது தான ஓவர்!!
ராஜா சார் பாட்டு மட்டும் இல்ல பல நேரத்துல சொந்த சரக்குல எலிமருந்த கலந்துக்கறாங்க!
 

இத்தன நாள் பொருத்து  பார்த்த ராஜ சார், இனி யாராவது ரீமிக்ஸ் செய்யனும்னா என் கிட்ட அனுமதி வாங்கனும்னு சொல்லிருக்கார்!! வாழ்த்துக்கள் ராஜா சார்!! ஆனா நல்ல ரீமிக்ஸ் பாட்டுக்கு ஓகே சொலுங்க ப்ளீஸ் !! 
 

ஏன்னா சில நல்லப்பாட்டு ரீமிக்ஸ் மூலமா தான் மறுவாழ்வு வந்துச்சு.. உதாரணம் “மடை திறந்து”. நான் மொதல ரீமிக்ஸ் தான் கேட்டேன் அதுக்கு அப்புறம் தான் ஒரிஜினல் பாட்டே கேட்டேன். நிறைய பேர் அந்த பாட்ட கேட்டிருந்தாலும் அவங்க நினைவுல இருந்து அந்த பாட்டு மறஞ்ச நேரத்துல தான் ரீமிக்ஸ் வந்துச்சு.. அதான் மறுவாழ்வு கொடுத்துதுனு சொன்னேன்!!

 

 டிஸ்கி:

நீங்க ஏமாற்றம் அடையக்கூடாதுனு தான ரேப் சாங் னு வைக்காம  ரேப் ‘ஏ சாங்’ (Rape A song) னு வெச்சிருக்கேன். நீங்க அந்த ஏ க்கு மேல வட்டம் போட்டு படிச்சிருந்தா கம்பெனி பொறுப்பில்லை!!

--புவனேஷ்-- எழுதியவை | திசெம்பர் 29, 2009

நையாண்டி குடும்பத்தார்

நான் ரொம்ப நாள் முன்னாடி ஒரு பாட்டு பாத்தேன்.. அந்த படத்தோட ஹீரோ ஸ்கூல் டிரஸ் போட்டு டூயட் பாடிட்டு இருந்தாரு… விசாரிச்சா அந்த படத்துல ஹீரோ ஸ்கூல் பையனாம்!! அந்த படத்துல ஹீரோக்கு அப்பா நம்ம மணிவண்ணன் சார்!

அப்பவே எனக்கு ஒரு யோசனை வந்துச்சு.. மணிவண்ணன் சார ஸ்கூல் பையனா நடிக்க வெச்சு ஒரு படம் எடுக்கனும்னு! உண்மைய சொன்னா அந்த ஹீரோவா விட மணிவண்ணன் அந்த கேரக்டர் க்கு பொருத்தமா இருப்பார்! இதுக்கு மேல அந்த படத்த பத்தி பேசுனா, ஏற்கனவே பல ‘தருண‘த்துல சிம்புவையும், விஷாலையும் அந்த படத்துல ஹீரோவா நடிச்ச டைரக்டர் ‘கோபி‘ச்சமாதிரி என்னையும் திட்டுவார்!! (ஐயோ பாருங்களேன் எனக்கு கிசு கிசு எழுதவும் வருது.. பத்திரிக்கை உலகம் இத நோட் செய்யுமா??)

சரி, இப்ப நான் யோசிச்ச மாதிரி ஸ்கூல் பையனா மணி சார யோசிக்கலைனாலும் அத விட பெட்டரா வெண்ணிறாடை மூர்த்தி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் மூணு போரையும் காலேஜ் பையானா போட்டு ஒரு படம் எடுக்கறாங்க!! பேரு தமிழ் படம்”!! புதிய முயற்சி!! தனிமனித தாக்குதல் இல்லாம நகைச்சுவை மட்டும் இருக்கும்னு நம்புவோம்!! (அப்ப இத்தன நேரம் நீ தருண் கோபிய செஞ்சது என்னனு கேக்கறீங்களா??)

இந்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காம, இயக்குனர்  வேற  வழி  தெரியாம  அழகிரி யோட  பையன  (தயாநிதி அழகிரி) மதுரைல மடக்கி மிரட்டி கைஎல்லுத்து வாங்கிட்டாரு!! (அப்படின்னு தயாரிப்பாளரே சொன்னாரு!!)  

 அடுத்தது நம்ம ஆதித்யா சேனல் விளம்பரம் பாத்தீங்களா.. அதாங்க “ஐ லவ் அதித்யா“னு ஒரு பிகர் வந்து சொல்லும். அப்புறம் ஒரு வெள்ளைகார பொண்ணு வரும்.. ஞாபகம் வந்திருச்சா??

இப்ப எனக்கு ஒரு டவுட்..

அதுல ஏன் தமிழ் பொண்ணு (பாக்க அப்படித்தான் இருந்துச்சு) வந்து இங்கிலீஷ் ல “ஐ லவ் அதித்யானு சொல்லணும்” ஏன் ஒரு வெளிநாட்டு பொண்ணு வந்து “அடித்யா பாருங்கோ..”னு சொல்லணும் ?? (தமிழ் ஆர்வலர்கள் கவனிக்க!!)

 ரெண்டாவது டவுட்: ஏன் இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் நான் மட்டும் செய்யறேன்!!

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்