--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 1, 2008

முன்னுரை!

சுட்ட பழம்! இந்த பெயரை பார்த்து ஏதோ இது “COPY” அடிக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு இடுகைனு நினைக்காதிங்க! இது அது இல்ல! இதில் மோகன் (மோகன) படமான சுட்டபழம் மாதிரி எதுவும் இருக்காது! நம்ம “S.J.Suryah” மாதிரி சொல்லனும்னா நான் இப்போ திருந்திட்டேன்! அப்பறம் “ஏன்டா சுட்டபழம்னு ஒரு பேரு?”-னு நீங்க கேட்கறது எனக்கு கேட்குது (இத தப்பி தவறி யாராவது படிச்சா கேட்பீங்க!). இது நட்பு!! என் நண்பன் பிரவீன் நிறைய கதை எழுதறான்! கவிதை எழுதறான்! ஒரு “Blog” ஆரம்பின்னு சொன்னா கேட்கல! அதான்! இங்க அவன் கதைகளை உங்களுக்காக சுட்டு (அல்லது சுட சுட) தருகிறேன்! அவன் கதைகளில் அவன் பெயர் இருக்கும்! பெயர் இல்லை என்றாலும் அது அவன் கதையாகத்தான் இருக்கும்! நான் கதை எழுதினேன் என்று நான் சொன்னால் நம்பாதிர்கள், அது கண்டிப்பாக கதை ஆகதான் இருக்கும்! இனி உங்கள் பாடு அவன் பாடு! அவன் கதைகளுக்கு “Mark” போடும் வேலை உங்களுக்கு!

அவன் கதை விரைவில்! காத்திருங்கள்! (நீங்கள் படிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம்!)
நன்றி !

Advertisements

ரொம்ப நாள் கழுச்சு எழுதனும்னு முடிவு செஞ்சாச்சு.. ஆனா வழக்கம் போல என்ன எழுதறதுனு தெரியல..

சரி கழுத, யாருக்காவது அட்வைஸ் செய்யறேன்!!

அட்வைஸ் செய்யலாம் ஆனா யாருக்கு செய்யறது?? எனக்கு அரசியல் தெரியும், ஆனா அதுல இப்பதான் நீந்தி பழகறேன்(!). சரி சினிமா ல இருக்கறவங்க தான் பொது சொத்து. யார் வேணா அவங்களுக்கு அட்வைஸ் சொல்லலாம்!!

 நான் ஜாக்கிக்கு அட்வைஸ் செய்யலாம்னு பாத்தா நமக்கு சீன மொழி நோ கமிங்!! தலைவர் ரஜினி க்கு அட்வைஸ் செய்ய சீமான், தங்கர், ராமு (நான் தாஸ் னு போடுவேன்.. அதுக்கு அவங்க ராமதாசு னு போட சொல்லுவாங்க.. )  நிறைய பேரு இருக்காங்க..  கமல்ஜிக்கு கிருஷ்ணசாமி, புதுசா ஏதோ ஒரு இயக்கம்னு ஆள் இருக்கு!!

 இப்ப நான் யாருக்கு அட்வைஸ் செய்ய??  “முதல்ல சொன்னதே இப்பவும் சொல்லறேன்.. ” சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலும் மாறாது போல!!”

 அட..” சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலும் மாறது போல!!” — இந்த வார்த்தைகளுக்குள்ள ஒரு ஹீரோ இருக்கார்.. கரெக்ட் விஜய் தான் நம்ம ஹீரோ!! ஹே.. ஹே!!

விஜய் சார்.. தலைவர காப்பி அடிக்கறது ஓகே.. ஆனா அத சரியா செய்யுங்க ப்ளீஸ்! இன்னைக்கு வரைக்கும் ஹீரோயச படங்களுக்கு சிகரமா இருக்கற பாட்ஷா ல கூட தலைவர வில்லன் புகழ்ந்து பேசமாட்டான்!! கொஞ்சம் யோசிங்க அந்த படத்துல ரகுவரன் இப்படி பேசிருந்தா காமெடி ஆகிருக்காது ? “” நாம ஆட்டோ ரேஸ் வெச்சா அவன் ஆட்டோக்கரனா இருக்கான், ஆர்ம்ஸ் (arms) யூஸ் செஞ்சா அவன் ஆர்மிக்கரனா இருக்கான்”.. இந்த மாதிரி தான் உங்க படத்துல வில்லன் பேசற வசனம் இருக்கு!

ஏன் சார் உங்க படத்துல வில்லன் கூட உங்கள புகழ்ந்துட்டே இருக்கான்?

அடுத்து ஒரு சின்ன குழந்தைக்கு கூட தெரியற லாஜிக்!! கெத்தான வில்லன, சாதாரண ஆள் ஜெய்க்கும்போது அவன் ஹீரோ ஆகறான்!! படமும் சும்மா அதிரும்!! உங்க கில்லி கூட சூர் ஷாட் ஆனது இப்படித்தான்! சாதாரண வில்லன கெத்தான ஹீரோ அடுச்சா, படம் வேட்டைக்காரன் மாதிரி தான் இருக்கும்!

தலைவர் படம் பாத்தீங்கனா அண்ணாமலைக்கு அப்புறம் வீரா னு ஒரு காமெடி படம் கொடுத்துட்டு தான் பாட்ஷா பக்கம் வந்தாரு! அதாவது ஆக்சன் தேகட்ட கூடாது  !!

விலகி இருக்க வேண்டிய ஆள்: சொல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு! அவரு தான் உங்க அப்பா !

நீங்க வேணா அவருக்கு ஒரு கவிதை எழுதுங்க

அப்பா

நீங்க எனக்கு

ஆப்பா ??

வீட்டு பக்கம் விட கூடாத டைரக்டர்கள்: இந்த டைரக்டர் எல்லாம் இன்னும் ரெண்டு வருஷம் உங்க வீட்டு பக்கம் வராம பாத்துகோங்க!!

1.       தரணி அண்ட் கோ !!

2.       பேரரசு!!

  வேலை செய்யவேண்டிய டைரக்டர்:

1.       முருகதாஸ் – மாஸ் சுப்ஜெக்ட் நல்லா செய்வாரு!

2.       லிங்குசாமி – இவ்வரும் சொதப்ப வாய்பிருக்கு!

அணுக வேண்டிய தயாரிப்பாளர்கள்:
  1. சிவாஜி பில்ம்ஸ்
  2. தாணு

 

ஏதோ என்னால முடுஞ்ச அட்வைஸ் சொல்லியாச்சு!!

குறுகுறுப்பு: தலைப்புல இருக்கற மாத்தவே முடியாத மேட்டர், நான் மொக்க போடறது!!

--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 24, 2010

தங்க வேட்டை — ஒரு புதிர் !!

சும்மா ஒரு புதிர் படுச்சேன்.. வொர்க் அவுட் ஆச்சுனா நிறைய கேக்கறேன்!!

அஞ்சு திருடர்கள் (அப்புறம் அரசியல்வாதிகளுக்கு மரியாத முக்கியம் இல்ல? ) இருக்கீங்க.. கரெக்ட் நீங்களும் ஒரு திருடர். நீங்க எல்லாம் சேந்து நூறு தங்க பிஸ்கட் அபேஸ் செஞ்சுட்டீங்க!! இப்ப உங்களுக்குள்ள பங்கு பிரிக்கறதுல பிரச்சனை.. உங்க பாஸ் ஒரு வழி சொல்லறார்!! ஒரு ஒருத்தரா எப்படி பங்கு பிரிக்கரதுனு ஐடியா சொல்லணும்.. சொன்னவுடனே ஓட்டெடுப்பு நடக்கும்.. மெஜாரிட்டி (>50%) இல்லைனா ஐடியா சொன்னவன போட்டு தள்ளீட்டு அடுத்தவன் கிட்ட ஐடியா கேப்பாங்க.. திரும்பவும் ஓட்டெடுப்பு!! திரும்பவும் மெஜாரிட்டி!!

அதாவது நீங்க மொதல்ல ஐடியா கொடுத்து.. அந்த ஐடியா மூணு பேருக்கு புடிக்கலைனா.. நீங்க காலி!!

இப்ப நீங்க தான் ஐடியா கொடுக்கணும்! அப்படீனா உங்களுக்கு எத்தன தங்க பிஸ்கட் கிடைக்கும்??

குறிப்பு:

எல்லா திருடர்களும் அறிவாளிகள்.. எத்தன முடியுமோ அத்தன எடுக்க பாக்கறாங்க..
யாருமே மத்தவனுக்கு தரணும்னு நினைக்கல!!

வாழ்த்துக்கள் !!

--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 18, 2010

சொந்த கார்

ஹாய்.. நான் சௌந்தர்.. செல்லமா வட்டி!! பேர பாத்து நான் ஏதோ வசூல் ராஜா கிட்ட வேல செய்யறதா நெனச்சுக்காதீங்க! நான் ஜெமினி படத்துல வர கிரண் மாதிரி! அதாவது சேட்டு!

நீங்க என்ன சௌந்தர், வட்டி, சேட்டு னு எப்படி வேணா கூப்பிடுங்க.. ஆனா வட்டி சேட்டுனு மட்டும் கூப்பிடாதீங்க. அப்படி கூப்பிட்டா என் மனசுக்கு ஒத்துக்காது!! காரணம் சாதாரண காரணம் இல்ல.. ரெண்டு தலைமுறையா எங்க மனசுல முள்ளா குத்தற விஷயம்!!

படுபாவி தமிழ் சினிமா! எங்க வாழ்க்கைல மண்ணள்ளி போட்டுருச்சு!

எங்க தாத்தா அந்த காலத்துலையே நல்லா தமிழ் பேசுவார். இந்த தமிழ் சினிமா சேட்டு னா “ஹரே.. நல்லா இருக்குதா ” னு கேக்கறவங்கள தான் சேட்டுனு நம்ப வெச்சிருக்கு. எங்க தாத்தா நல்லா தமிழ் பேசுனதால அவர யாரும் சேட்டு னு நம்பல. அதுனால எங்களுக்கு வட்டி தொழிலும் போச்சு, அந்த கஷ்டத்துல எங்க தாத்தாவும் போய்டாராமா! போறதுக்கு முன்னாடி சுத்தமா தமிழ் பேசாத சேட்டு பொண்ணா பாத்து எங்க அப்பாக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிட்டு போயிருக்காரு!

முதல் காரணம் பிளாஷ் பேக்னா ரெண்டாவது காரணம் பயம். சோட்டா சேட்டு, படா சேட்டு, பாண் * சேட்டு (படம் பாக்கும் போது இந்த இடத்துல “கீன்” னு சத்தம் வரும்.. அதுக்கு தான் அந்த * ) னு ஏற்கனவே தமிழ் சினிமால நிறைய ரவுடி இருக்காங்க. நீங்க வட்டி சேட்டு னு கூப்ட்டு யாரவது காதுல விழுந்தா அதுத்த படத்துல அப்புறம் வில்லனுக்கு அந்த பேரு தான்!

சரி என்னோட லட்சியம் என்ன தெரியுமா? சொந்தமா ஒரு கார் வாங்கணும்.. அதுவும் வட்டிக்கு விடாம உழைச்சு வாங்கணும்! என்னோட நட்பு வட்டத்துக்கு எல்லாம் இந்த லட்சியம் தெரியும்!

போன மாசம் கூட இந்த சுந்தர் ஒரு கார் வாங்குனான். அதுல இருந்து அவன் இம்ச தாங்க முடியல. கார் வாங்கணும்னா தண்ணி அடிக்காத, தம் அடிக்கத, பொறுப்பா நடந்துக்கோ னு ஆயரம் அட்வைஸ். அவனுக்கு அவன் அப்பா பாதி காசு கொடுத்திருக்காரு, ஆனா நான் சொந்தமா என் காசுல வாங்கனும்னு இருக்கேன்!

நம்ம சுப்பிரமணி அண்ணன் வொர்க் ஷாப் ல சொல்லிருக்கேன். அறுபது ஆயரதுக்கு ஒரு வண்டி வந்திருக்கு, வாங்கி உன் லட்சியத்த முடிச்சுக்கோ னு சொன்னார், நான் ஒத்துக்கல. நான் கேட்டது சான்ட்ரோ. அது ஒரு லட்சமாம். என்ன செய்யறதுன்னு யோசிக்கணும்.

ஐயோ. யோசிக்கலாம்னு தனியா வந்தா இந்த சுந்தர் வந்திருக்கானே. இப்ப எல்லாம் பாத் ரூம் போனாலும் கார்ல தான் போவான் போல. கூட வேற ஒரு தூம கேதுவ கூட்டிட்டு வருதே. இரு இரு இன்னும் கொஞ்ச நாள்ல நானும் கார்ல படம் போடறேன் னு மனசுல நினைக்கறதுக்குள்ள

ஹாய் டா மச்சி

சொல்லு சுந்தர்

என்னடா ஒரு மாதிரி இருக்க

ஒன்னும் இல்ல.. இவரு யாரு ?

என்னோட சித்தப்பா டா.. சொந்தம் தான் டா நமக்கு எல்லாம்.. அதான் கார் வாங்குன சந்தோஷத்த அவங்க கூட பகிர்ந்துக்கறேன்.

அவன் இப்படி எனக்கு அட்வைஸ் செஞ்சது, கார் வாங்குன திமிர். கார் வாங்குனதுல இருந்து எனக்கு தினமும் இப்படி தான் “தினம் ஒரு அட்வைஸ்” இல்லனா “தினம் தினம் செய்தி “. எனக்கு இன்னைத்த கோட்டா முடுஞ்சுது.. இனி வீட்டுக்கு போக வேண்டியது தான்.

போனா வீடே அமைதியா இருந்துச்சு. என் மனசு மட்டும் சத்தம் போட்டுச்சு. நேரா என் ரூம்க்கு போனேனேன். என்ன யோசிக்கறதுனு என் மனசு கூட சண்ட போட்டுட்டு இருந்தேன்.

அம்மா வந்தாங்க. அவங்க தம்பிக்கு ஏதோ கோளராமா.. சரி செய்ய நான் கார் வாங்க சேத்தி வெச்சிருந்த காச கேட்டாங்க. எனக்கு சுந்தர் கார் மனசுல வந்து வந்து போச்சு.. அழுகை வந்துச்சு. கோவம் வந்துச்சு.. கடைசியா சுந்தர் சொந்த காரங்களா பத்தி சொன்னது ஞாபகம் வந்துச்சு..
மாமா வா? காரா ? அட எனக்கு இப்ப தான் என் மாமாக்கு உடம்பு சரியில்ல னு தோணுது.. இத்தனை நேரம் அம்மா தம்பி னு தான நெனச்சேன் ??

இப்ப எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. சொந்த காரரா? சொந்த காரா ?

நான் என் முடிவ அம்மா கிட்ட சொன்னேன்.

அவங்க வெளிய போய்
அவனுக்கு சொந்த கார் தான் முக்கியம்னு சொன்னாங்க

உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நெனைக்கறேன் எங்க அம்மாக்கு நல்லா தமிழ் பேச வராது. அவங்க பாஷைல சொல்லனும்னா ஹரே.. உன்க்கு சொந்த கார் வேணுமா? இல்லே சொந்த கார் வேணுமா னு நீயே முடிவு செஞ்சுக்கோ”

--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 11, 2010

எல்லா சத்தியங்களும் எல்லா தர்மங்களும்

ஹாய்.. ஒரு பதிவர் ரொம்ப நாளா எழுதாம இருந்து எழுதினா ஒரு வசதி இருக்கு.. அதுவும் மொக்கை தான் போட போறோம்னு கமிட் ஆனா ரொம்ப வசதி!
 
அது என்னனா “என்ன தலைப்பு??” னு மண்டைய பிச்சுக்க வேண்டாம்! “நான் ஏன் எழுதல”ன்னு ஒரு பிட்டு போடலாம்! நான் கிட்ட தட்ட அதத்தான் செய்ய போறேன்! யாரு கண்டா அதா செய்யாம கூட போலாம். நான் என்ன முடிவு செஞ்சுட்டா எழுதறேன்? ப்லொவ் ல வரும்..
 
அதுக்கு முன்னாடி சந்தோஷத்த பகிர்ந்துக்கறேன்., நான் எழுதாம இருந்த இத்தனைநாள் என் தளம் ஹிட்ஸ் வாரி கூவிச்சுது.. கிட்ட தட்ட 300 ஹிட்ஸ்.. ஒரு நாளுல இல்ல நாப்பது நாளுல!! யாரோ நாலு பேரு எட்டி பாத்துட்டு போயிருக்கீங்க.. யாருங்க அந்த நாலு பேரு ? அந்த நாலு பேரு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!! (வந்து எழுதிருக்கனான்னு பாத்தீங்களா இல்ல எழுதிருவான்னு பயத்துல பாத்தீங்களான்னு சொல்லுங்க! )
 
 
அப்புறம் இத்தனாள் ஏன் எழுதலன்னு சென்னை,கோவை, திருப்பூர், பெங்களூர், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, நைஜீரியா ல இருந்து போன் செஞ்சும் மெயில் அனுப்பியும் கேக்காமா சனியன் தொலஞ்சுதுனு இருந்த அத்தனை பேருக்கும் நன்றி! சத்திரியனுக்கு சாவே இல்ல ! (அப்ப சனியனுக்கு  சாவிருக்கா??)
 
சரி எழுத வேண்டாம் னு ஒதுங்கி இருந்தா , எழுத சொல்லி மிரட்டறாங்க அய்யா.. ஆனா நான் இப்ப எழுதறது மிரட்டலுக்கு பயந்து இல்ல.. மொக்க போட இருக்கற ஆர்வத்துல தான்! (நாளைக்கு கலைஞர் காலுல விழுந்து போட்டோ வேற எடுக்கணுமா? அய்யோ அய்யோ !!)
 
சரி இப்ப நான் ஏன் எழுதலன்னு சொல்லணும்.. அத லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சொல்லறேன் ..
 

”உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக, ஆழமாக நான் சொல்ல விரும்புகிறேன். சட்ட ரீதி யாக எந்தத் தவறையும் நான் செய்யவில்லை. இந்த இக்கட்டானா நேரத்தில் என்னோடு இருந்த நண்பர்கள், நலம் விரும்பிகள், சிஷ்யர்கள் (இங்கிலீஷ் ல followers !), என்னால்  பயன் பெற்றவர்கள் (இது எனக்கே  ஓவரா தான் இருக்கு!) எல்லோருக்கும் நன்றி! எல்லா சத்தியங்களும் எல்லா தர்மங்களும் உங்களுக்கு புலப்படும்.. அதுவரை அமைதி காக்காமல் கமெண்ட் போடுமாறு கேட்டுகொள்கிறேன்!

Older Posts »

பிரிவுகள்