--புவனேஷ்-- எழுதியவை | ஜனவரி 6, 2010

ரேப் ‘ஏ சாங்’


இப்ப நான் உங்களுக்கு ரேப் எப்படி செய்யறதுன்னு சொல்லப் போறேன்!

எனக்கு முன்ன பின்ன இப்படி ரேப் செஞ்ச அனுபவம் இல்ல!! ஆனா கேள்வி ஞானம் நிறைய இருக்கு!!  உங்களுக்கும் இருக்கு, ஆனா நீங்க வெளிய சொல்ல மாட்டீங்க.. காரணம் பயம்!! அந்த பயம் எனக்கு இல்ல !!
 
 
என்னடா ஏதோ தமிழ் சினிமா வசனம் மாதிரி இருக்குனு பாக்கறீங்களா?? தமிழ் சினிமா தான்!! 
தமிழ் சினிமால ஆங்கிலத்தின் ஆதிக்கம் இப்ப ரொம்ப அதிகமா இருக்கு.. என்ன பொறுத்த வரைக்கும் இது ஆரம்பிச்சது 80’s ல.. அப்ப இருந்து அது கொஞ்சம் கொஞ்சமா வளந்து வந்துச்சு.. அப்ப எல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை.. இப்ப தான் பிரச்சனை பண்ணறாங்க!!

நான் பிரச்சனை பண்ணறாங்கனு சொன்னது நம்ம சினிமால இருக்குற ஆளுகளத்தான்.. சத்தியமா இவங்க தொல்ல தாங்க முடியோல..

அந்த காலத்துல வசனத்துல தேவை இல்லாம ஆங்கிலம் வரும்.. அப்ப தான் கெத்து.. நான் அது வேண்டாம்னு சொல்லல!! என்னால ஒரு வாக்கியம் கூட ஆங்கிலம் இல்லாம பேசமுடியாது. சைக்கிள், பஸ், ப்ளீஸ், சாரி எல்லாம் இப்ப பேச்சு மொழில வந்திருச்சு.. அத பத்தி இப்ப பேசல. தேவை இல்லாமா ஹீரோ வில்லன பாத்து ஒரு “பீட்டர்” விடுவாரு.. அத இப்ப பாத்தா சிரிப்பா வரும்.

அப்ப எல்லாம் வெறும் வசனம் தான்.. இப்ப பாட்டு! வசனம்னா அங்க படம் பாக்கும்போது மட்டும் தான் தொல்லை. ஒரு தடவையோ ரெண்டு தடவையோ.. அதோட முடுஞ்சுது! அதே பாட்டுனா ??

இப்ப எல்லாம் படத்துக்கு ஒரு பாட்ட ரேப் செஞ்சிடறாங்க.. ஒரு பாட்ட ரேப் செய்யறது ரொம்ப ரொம்ப சுலபம்.. 

சரிங்க, உங்களுக்காக.. ஏதோ என்னோட மொக்க ப்ளாக் எல்லாம் படிக்கறீங்க ங்கற ஒரே காரணத்துக்காக ரேப் எப்படி செய்யறதுன்னு சொல்லப் போறேன்!</!!

ராஜா சார் போட்ட ஏதாவது நல்ல பாட்டு எடுத்துக்கணும்.. டெம்போ கொஞ்சம் அதிகம் வெச்சு பாட்ட பாடா படுத்தனும் .. முக்கியமான விஷயம் பாட்டுல இடைல இடைல பாஸ்ட் ஆக்கணும்.. இப்ப நான் சொன்னது எல்லாம் வெறும் ரேப் மூடுக்கு வரதுக்கு தான்!! அதாவது ராஜா சார் பாட்டு நல்லா பொடவ கட்டிட்டு கையெடுத்து கும்பிட வைக்கற மாதிரி அம்சமா இருக்கும்.. நம்ம மியூசிக் டைரக்டர் என்ன செய்வாருனா அவருக்கு புடுச்ச மாதிரி அந்த பொண்ண.. ச்சி ச்சீ பாட்ட அலங்கோலம் படுத்துவாரு..

இப்ப இடைல இடைல புரியாத ஆங்கில வார்த்தைய வெச்சி ஒரு பாட்டு போடனும்.. கேட்டா ராப்னு சொல்லுவாங்க.. இங்கிலீஷ் காரனுக்கு வேணா அது ராப் சாங்கா இருக்கலாம்.. நம்ம ராஜா சார் பாட்ட ‘பொறுத்த’ வரைக்கும் அது ரேப் சாங்!!
 
அந்த மாதிரி ரேப் செஞ்ச சில பாட்டு எனக்கும் பிடிச்சுது.. அதுக்காக அந்த மாதிரி ஒரு ரேப் சாங் இருந்தாதான் படம் ஓடும்னு சென்டிய போட்டு எடுக்கறது தான ஓவர்!!
ராஜா சார் பாட்டு மட்டும் இல்ல பல நேரத்துல சொந்த சரக்குல எலிமருந்த கலந்துக்கறாங்க!
 

இத்தன நாள் பொருத்து  பார்த்த ராஜ சார், இனி யாராவது ரீமிக்ஸ் செய்யனும்னா என் கிட்ட அனுமதி வாங்கனும்னு சொல்லிருக்கார்!! வாழ்த்துக்கள் ராஜா சார்!! ஆனா நல்ல ரீமிக்ஸ் பாட்டுக்கு ஓகே சொலுங்க ப்ளீஸ் !! 
 

ஏன்னா சில நல்லப்பாட்டு ரீமிக்ஸ் மூலமா தான் மறுவாழ்வு வந்துச்சு.. உதாரணம் “மடை திறந்து”. நான் மொதல ரீமிக்ஸ் தான் கேட்டேன் அதுக்கு அப்புறம் தான் ஒரிஜினல் பாட்டே கேட்டேன். நிறைய பேர் அந்த பாட்ட கேட்டிருந்தாலும் அவங்க நினைவுல இருந்து அந்த பாட்டு மறஞ்ச நேரத்துல தான் ரீமிக்ஸ் வந்துச்சு.. அதான் மறுவாழ்வு கொடுத்துதுனு சொன்னேன்!!

 

 டிஸ்கி:

நீங்க ஏமாற்றம் அடையக்கூடாதுனு தான ரேப் சாங் னு வைக்காம  ரேப் ‘ஏ சாங்’ (Rape A song) னு வெச்சிருக்கேன். நீங்க அந்த ஏ க்கு மேல வட்டம் போட்டு படிச்சிருந்தா கம்பெனி பொறுப்பில்லை!!


மறுவினைகள்

  1. //அதாவது ராஜா சார் பாட்டு நல்லா பொடவ கட்டிட்டு கையெடுத்து கும்பிட வைக்கற மாதிரி அம்சமா இருக்கும்.. நம்ம மியூசிக் டைரக்டர் என்ன செய்வாருனா அவருக்கு புடுச்ச மாதிரி அந்த பொண்ண.. ச்சி ச்சீ பாட்ட அலங்கோலம் படுத்துவாரு..

    அப்படி தான் பண்ணுறாங்க… இருந்தாலும் தம்பி… முடியல.

    • வாங்க அக்கா.. முடியல னு தான் நான் வகை படுத்திருந்தேன்.. நீங்க கவனிக்கலையா ?

  2. தலைப்ப எப்படி எல்லாம் வைக்கலாம் என்று உங்ககிட்ட தான் டியூஷன் எடுக்கணூம் தம்பி.

    • எல்லாம் இந்த பதிவுலகம் கத்து கொடுத்தது அக்கா!! நான் இங்கிலீஷ் ல வெச்சேன் அது இப்படி ஆகிடுச்சு.. நான் என்ன செய்ய ?

  3. அதாவது ராஜா சார் பாட்டு நல்லா பொடவ கட்டிட்டு கையெடுத்து கும்பிட வைக்கற மாதிரி அம்சமா இருக்கும்.. நம்ம மியூசிக் டைரக்டர் என்ன செய்வாருனா அவருக்கு புடுச்ச மாதிரி அந்த பொண்ண.. ச்சி ச்சீ பாட்ட அலங்கோலம் படுத்துவாரு..

    ellam kalakkodumai nanbaa

  4. இத்தன நாள் பொருத்து பார்த்த ராஜ சார், இனி யாராவது ரீமிக்ஸ் செய்யனும்னா என் கிட்ட அனுமதி வாங்கனும்னு சொல்லிருக்கார்!!

    idhu eppo nanba?

    thiruvasagathukkuthaan copyrights vachirukkaaru

    • மச்சி நீ இன்னைக்கு பேபர் படிக்கல.. நேத்து தான் அறிக்கை கொடுத்திருக்கார் !!

  5. தேவை இல்லாமா ஹீரோ வில்லன பாத்து ஒரு “பீட்டர்” விடுவாரு.. அத இப்ப பாத்தா சிரிப்பா வரும்.

    enna irundhaalum rajiniya kindal adikkaradhukku oru alavu irukkiradhu.

    maraimugamaaga irundhaalum idhu engal thalaivarai thaan kutheettiyaaga thaakkugiradhu enbadhai thelivaaga ariya mudigiradhu.

    idhai naangal vanmayaaga kandikkirom

    –ippadikku
    –rajini pesiya englishaal typhoid, dysentry vandhor sangam

    • ANGRY IS CAUSE OF ALL THINGS. ONE MUST KNOW HOW TO CONTROL IT> OTHERWISE LIFE WILL BE MISSERABLE!! னு சொல்லிகொடுத்திருக்கார்.. அதனால இந்த பருப்பு இங்க வேகாது!!
      🙂 🙂

  6. இளையராஜா 2000ம் ஆண்டுக்கு முன்னாடி வந்த தன்னோட பாடல்கள் உரிமைய ‘அகி’ நிறுவனத்துக்கு தந்துட்டாருங்கற ஒத்த வரி செய்திக்கு இப்படியொரு கவர்ச்சியான தலைப்பை கொடுத்து கலவரப்படுத்திட்டு டிஸ்கி வேறயா 🙂

    //enna irundhaalum rajiniya kindal adikkaradhukku oru alavu irukkiradhu.//

    யாருப்பா இந்த காலமேகப்புலவர் 🙂

    • மச்சி தலைப்பு கவர்ச்சியா வா இருந்துச்சு ? (நிறைய பேர் கவுச்சியா இருந்துச்சுன்னு சொல்லப்போறாங்க!) நான் குழந்தை மனசோட வெச்சேன்!

      சுரேஷ் என் நண்பர் தான். என்ன கோவப்படுத்த இப்படி ஒரு முயற்ச்சி!!

  7. அட….இதுகூட நல்லாத்தான் இருக்கு! சபாஷ் புவனேஷ்.

  8. paathiyaa….. neeyae thalaivarooda english puriyaama thappa eluthitta.

    “ANGRY IS CAUSE OF ALL THINGS. ONE MUST KNOW HOW TO CONTROL IT> OTHERWISE LIFE WILL BE MISSERABLE!!”

    adhu “LIFE WILL BECOME MISERABLE” NU SOLVAARU.

    ENAKKE KULAMBUM .
    ADHU “LIFE WILL BECOME MISERABLE” NU SOLRAARA ILLA “LIFE WILL BE SOME MISERABLE”NU SOLRAARAANNU.

    KOOTTI KALICHU PAARU KANAKKU SARIYA VARUM

  9. சின்ன புள்ளத் தனமா இல்லை .
    தலைப்பை பார்த்து , பயந்து பயந்தது படித்தேன் .
    (எப்புடி ). Actually நான் ரொம்ப நல்லவனாக்கும் .
    ராஜா சார் அனுமதியோட ரேப் ? வேண்டாம் .
    ஊனமாக இருந்தாலும் “காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” ..
    எந்த பாடலையும் யாரும் , எதற்காகவும் ரேப் பண்ண வேண்டாம் என்பதே என் வாதம் , கருத்து , …..

  10. சரி தான்! ஆனா அந்த மிக்சிங் நல்லா தான இருக்கு


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்