--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 20, 2009

இன்னைக்கு உனக்கு பர்த்டே வா??


ஹலோ இன்னைக்கு உனக்கு பர்த்டே வா டா?

 …

 அப்புறம் எப்போ?

  …

 சரி டா.. அப்போ என் அட்வான்ஸ் வாழ்த்தா வெச்சுக்கோ..

 பேச்சு சத்தம் கேட்டு முழிப்பு வந்தது அருணுக்கு..  முழிப்பு முழுவதும் வரவில்லை.. இன்னும் பாதி தூக்கத்தில் தான் இருந்தான்!!

 விடுமுறை நாட்களில் யாராவது ஒருத்தர் எழுந்து,  அங்கும் இங்கும் நடந்து அல்லது “தொல்லை”காட்சி போட்டு  மற்றவர்களின் தூக்கத்தில்  கபடி விளையாடுவது வழக்கம்.. இன்று அந்த வேலையை செம்மையாக செய்து கொண்டு இருந்தான் பிரபு.. இவனுக்கு எல்லாம் எப்படித்தான் காலங்காத்தால எட்டு மணிக்கு முழிப்பு வருதோ என்று எண்ணியவாறே முக்கால் தூக்கத்துக்கு போனான்!!

 

ஹலோ…

 …

இன்னைக்கு உனக்கு பர்த்டே வா?

 …

அப்போ நம்ம ப்ரெண்ட்ஸ் யாருக்காவது பர்த்டேவா??

 …

சரி டா, தூங்கு மதியானம் கூப்படறேன்…

 …

அழைப்பை கொஞ்சம் அவரச அவசரமாக துண்டித்தான்..

 

இவன் இப்படி செய்ததில் இருந்து மறுமுனையில் இருந்து ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிருக்க வேண்டும் என்று நினைத்து, சிரித்தவாறே போர்வையை இழுத்தி போத்தி தூங்க முயச்சிசெய்தான்..

இவன் சிரிப்பதை பார்த்த பிரபு, வந்து போர்வையை இழுத்தான்..

டேய் உனக்கு தான இன்னைக்கு பிறந்தநாள்?

இல்ல டா.. தூங்க விடு..

அப்புறம் ஏன் சிரிச்ச?

நீ இப்படி மொக்க மாதிரி செஞ்சா நான் தூக்கத்துல கூட சிரிப்பேன்..

நெஜமா உனக்கு இன்னைக்கு பிறந்த நாள் இல்லையா?

பதில் சொல்லாமல் போர்வையை இழுத்து போத்தினான்..

மறுபடியும் அதை இழுத்த பிரபு, ஏன் டா இங்க ஒருத்தன் பேசிக்கிட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு தூங்கற?

ஆமா நான் பாட்டுக்கு தூங்கறேன், அவன் டான்ஸ்க்கு தூங்கறான் என்று வினோத்தை கை காட்டினான்..

ஏன் டா.. தூக்கத்துல கூட இப்படி மொக்க போடற?? நம்ம கேங்ல யாருக்காவது இன்னைக்கு பிறந்த நாளா??

இல்ல.. இப்போ உனக்கு என்ன தாண்டா பிரச்சனை?

இல்ல டா.. என் க்ளோஸ் பிரென்ட் யாருக்கோ இன்னைக்கு பிறந்த நாள்.. யாருன்னு தான் தெரியல..

காலெண்டர்ல போட்டது கரெக்ட் தான்..

என்ன போட்டுது? ராசி பலனா??

இன்னைக்கு எனக்கு “சனி” கிழமைன்னு போட்டுருந்துது

எனக்கும் இன்னிக்கு “சனி” கிழமை னு தான் போட்டுருந்துது என்று வினோத் முனகினான்..

டேய் விளையாடாதீங்க.. என் பிரென்ட் யாருக்கோ மார்ச் 21 பர்த்டே.. யாருனா தான் தெரியல..

அருணும், வினோத்தும் அவசர அவசரமாக எழுந்து..

 

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

 

 

 

 

 

 

 

 

 

 

.. கோரஸாக கத்தினார்கள் “இன்னிக்கு தேதி மார்ச் 20..”


மறுவினைகள்

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் புவனேஷ்!

  2. வாங்க சிபி அண்ணே…
    என் பிறந்தநாள் அன்னிக்கு உங்கள நினச்சுகறேன்.. முதல் வருகைக்கு வாழ்த்துக்கள்!!

  3. Just miss Machi…
    Happy Birthday…

  4. To you???

  5. ஆமா நான் பாட்டுக்கு தூங்கறேன், அவன் டான்ஸ்க்கு தூங்கறான் என்று வினோத்தை கை காட்டினான்.. //

    ஆனா இப்ப வர தமிழ் படங்களைப் பார்க்க தியேட்டருக்கு போனா எல்லாரும் தூங்கிடுறாங்க மச்சி…

  6. //Just miss Machi…
    Happy Birthday…//
    மச்சி இது ஒரு கதை மச்சி.. நம்ம சிபி அண்ணன் சும்மா நக்கல் செய்யறாருன்னு நினைக்கிறேன்… எனக்கு இன்னைக்கு பர்த்டே எல்லாம் இல்லை!!

  7. //ஆனா இப்ப வர தமிழ் படங்களைப் பார்க்க தியேட்டருக்கு போனா எல்லாரும் தூங்கிடுறாங்க மச்சி…//

    எனக்கும் பரமசிவம், ஆதி இப்படி நிறைய படங்கள் அனுபவம் உண்டு!!

  8. //கோரஸாக கத்தினார்கள் “இன்னிக்கு தேதி மார்ச் 20..”//

    தூக்கத்தை கெடுத்ததுகாக, பொதுமாத்து போடாம விட்டாங்களே !!!!
    ultimate புவனேஷ்…!!! வாழ்த்துக்கள்…

  9. //தூக்கத்தை கெடுத்ததுகாக, பொதுமாத்து போடாம விட்டாங்களே !!!!
    ultimate புவனேஷ்…!!! வாழ்த்துக்கள்…//
    நன்றி ஆனந்த்!! (மச்சி நீ சொன்ன மாதிரி செஞ்சுட்டு, அப்படியா இன்னும் கொஞ்சம் கதைய கொண்டு போகலாம்னு யோசிச்சேன்.. இங்கயே முடுச்சாத்தான் நல்ல இருக்கும்னு விட்டுட்டேன்!!)

  10. //இங்கயே முடுச்சாத்தான் நல்ல இருக்கும்னு விட்டுட்டேன்!!//
    ஆமா மச்சி… இப்போ தான் crisp & super ஆ இருக்கு…

    எனக்கு இந்த பதிவ பார்த்த உடனே என் நான்கு வருட கல்லூரி விடுதி வாழ்க்கை தான் கண்முன்னாடி இருந்தது… “ஆ ஊ” ன்ன பொதுமாத்து தான், ஓட்டுவது தான்… என் நண்பன் ஒருத்தன் காலைல எழுந்து ஸ்பீக்கர் ல பாட்டு பயங்கர சத்தமா போட்டு எழுப்பி அடி வாங்கி இருக்கான்… அதுக்கப்புறம் எங்களுக்கு அவ்ளோ சக்தி இல்லாம போயிருச்சு…

    தினமும் அடிக்கத்தான்…
    என்ன தான் பாட்டு போட்டாலும், கண்ண இறுக்கி மூடி தூங்க பழகிட்டோமே… ஹி ஹி ஹி…
    பி.கு.:
    பார்த்தியா மாப்ள… இப்படி இழுத்தா எவ்ளோ மொக்கைய இருக்குனு… நான் தான் “ஹி ஹி ஹி” சிரிசுக்கணும்…

  11. ஆனா நீ பதிவுல போட்டு இருந்தா, கலக்கி இருப்பே… 🙂 but, இப்போ இருப்பது தான் சுவாரஷ்யம்….

    //எனக்கும் பரமசிவம், ஆதி இப்படி நிறைய படங்கள் அனுபவம் உண்டு!!//
    தூங்கறுதுக்காகவே போனேன்னு சொல்லு மச்சி…

  12. //எனக்கு இந்த பதிவ பார்த்த உடனே என் நான்கு வருட கல்லூரி விடுதி வாழ்க்கை தான் கண்முன்னாடி இருந்தது…//
    அப்படியா? அப்போ காட்சிகளை Relate பண்ண Easyaa இருந்திருக்கும்!!

    //பி.கு.:
    பார்த்தியா மாப்ள… இப்படி இழுத்தா எவ்ளோ மொக்கைய இருக்குனு… நான் தான் “ஹி ஹி ஹி” சிரிசுக்கணும்…//

    இது எனக்கு புரியல !

  13. //ஆனா நீ பதிவுல போட்டு இருந்தா, கலக்கி இருப்பே… but, இப்போ இருப்பது தான் சுவாரஷ்யம்….//

    இந்த டயலாக் எல்லாம் வீண் ஆக்காத மச்சி.. எதாவது நல்ல தளத்துல போட தேவைப்படும்..

    //தூங்கறுதுக்காகவே போனேன்னு சொல்லு மச்சி…//

    ஹி ஹி..

  14. அப்போ நாளைக்கு ஒரு பதிவா??

  15. ட்ரீட் எல்லாம் கேக்கமாட்டேன்..
    சும்மா சொல்லுங்க நாளைக்கு உங்களுக்கு பிறந்த நாள் தானே??

  16. //அப்போ நாளைக்கு ஒரு பதிவா??//

    வாங்கண்ணே.. யாரும் இதை கேட்கலையேன்னு பாத்தேன்
    கதையோட முடிவ “அப்போ நாளிகும் எங்களுக்கு சனி கிழமையா?” னு கேட்கராமாதிரி வெச்சுருந்தேன்.. அப்புறம் மாத்தீடேன்..

  17. //ட்ரீட் எல்லாம் கேக்கமாட்டேன்..
    சும்மா சொல்லுங்க நாளைக்கு உங்களுக்கு பிறந்த நாள் தானே??//

    நாளைக்கு என் பிறந்த நாள் எல்லாம் இல்லை.. மொத தபா நம்ம கட பக்கம் வந்ததுக்கு வேனா ட்ரீட் கொடுக்கறேன்.. (நீங்க ஒரு தபா பதிவுலகுல எல்லோருக்கும் “என்னமோ ரீகல்” கொடுத்தீங்களே அந்தமாதிரி)..

  18. ஹாய் புவனேஷ் கதை ரொம்ப நல்லா இருந்தது .ஆமா மார்ச் 20 , 21 சொன்னது .நீங்க தான.

  19. வாங்க சித்ரா..
    இது நான் எழுதுன கதை.. இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே..

  20. //நாளைக்கு என் பிறந்த நாள் எல்லாம் இல்லை.. மொத தபா நம்ம கட பக்கம் வந்ததுக்கு வேனா ட்ரீட் கொடுக்கறேன்//

    நானும் முத தபாத்தான் வந்திருக்கேன்!

    (மார்ச் 21க்கும் அட்வான்ஸா வாழ்த்திக்கிறேன்)

  21. புவனேஷ் பிறந்த நாள் மார்ச் 27… மச்சி advance பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

  22. //ஆமா நான் பாட்டுக்கு தூங்கறேன், அவன் டான்ஸ்க்கு தூங்கறான் என்று வினோத்தை கை காட்டினான்… //

    இத நாங்க சொன்ன மொக்கை, நீங்க சொன்ன தமாசா? என்ன நியாயமடா?

  23. //இவனுக்கு எல்லாம் எப்படித்தான் காலங்காத்தால எட்டு மணிக்கு முழிப்பு வருதோ//

    எட்டு மணி காலங்காத்தால??? நான் இத்தனை நாளா அது நடு ராத்திரினு இல்ல நெனச்சிட்டு இருந்தேன்…

  24. கதை நல்லாயிருக்கு தம்பி.
    //ஆமா நான் பாட்டுக்கு தூங்கறேன், அவன் டான்ஸ்க்கு தூங்கறான் என்று வினோத்தை கை காட்டினான்..
    உங்களுக்குள்ள எவ்ளோ பெரிய கதாசிரியர் தூங்கிட்டு இருந்திருக்கார் பாருங்க.

    திடீர்ன்னு ஒரேயடியா எழுத ஆரம்சிட்டீங்க …… ஆபிஸ்ல வேலை இல்லையா?

    மார்ச் ௨௭ பிறந்த நாள் கொண்டாடும் புவனேஷ் குழந்தைக்கு எங்களது அன்பான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  25. சிபி அண்ணே.. இது உங்க ரெண்டாவது வருகை.. அதனால செல்லாது

  26. வாங்க சரவணா..
    //புவனேஷ் பிறந்த நாள் மார்ச் 27… மச்சி advance பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
    தேங்க்ஸ் டா… (ஏதோ உன்னால முடுஞ்சத செஞ்சுட்ட..)

    //இத நாங்க சொன்ன மொக்கை, நீங்க சொன்ன தமாசா? என்ன நியாயமடா?

    அதான் கதையோட அடுத்த வரில அதா மொக்கைனு சொல்லிட்டேன் இல்ல ??
    (இத எப்ப டா நீ சொன்ன? என் கற்பனை குதிரைக்கு நீ எப்போ புண்ணாக்கு வெச்ச? )

  27. //உங்களுக்குள்ள எவ்ளோ பெரிய கதாசிரியர் தூங்கிட்டு இருந்திருக்கார் பாருங்க.

    அவரு பாட்டுக்கு தூங்கிட்டே இருக்கட்டும்.. என்ன சொல்லறீங்க?

    //திடீர்ன்னு ஒரேயடியா எழுத ஆரம்சிட்டீங்க …… ஆபிஸ்ல வேலை இல்லையா?//

    ஆமா அக்கா.. கொஞ்சம் ஆணி கம்மி தான்..

    //மார்ச் ௨௭ பிறந்த நாள் கொண்டாடும் புவனேஷ் குழந்தைக்கு எங்களது அன்பான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

    நன்றி அக்கா..

  28. ப்லோக் லையே எல்லோரும் வாழ்த்தும் போது… இதோ…
    “இருபத்து நான்கு வருட அனுபவங்களும்
    ஒன்று சேர்ந்து…
    இன்பமான ஒவ்வொரு நடப்புகளும்
    இன்று(அன்று) குவிந்து…
    இனி வரும் உங்கள் வாழ்வில்
    ஒளியூட்டட்டும்… மெருகூட்டட்டும்…”

    ஆபிஸில்
    ஆணியே பிடுங்காத புவனேஷ்க்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்(advanced)…!!! 🙂

  29. ஹாய் புவனேஷ் மார்ச் ௨௭ பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  30. //இத எப்ப டா நீ சொன்ன? என் கற்பனை குதிரைக்கு நீ எப்போ புண்ணாக்கு வெச்ச?//

    இந்த மாதிரின்னு சொல்ல வந்தேன்… மிஸ் ஆயிடுச்சு…

    மச்சி அப்பறம் இன்னொரு மேட்டர்… நீ எல்லா உசிரையும் சமமா மதிக்கிரனு புரியுது… இருந்தாலும் குதிரை கொள்ளு தான் சாப்பிடும், சமயத்துல Rum அடிக்கும்… உன்ன மாதிரி புண்ணாக்கு சாப்பிடாது…

  31. ஆனந்த், கவிதை சூப்பர்.. மேனி மேனி தேங்க்ஸ்!! ரொம்ப நன்றி!!.. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு!!

    //ஆபிஸில்
    ஆணியே பிடுங்காத புவனேஷ்க்கு//

    ஹி ஹி..

  32. //ஹாய் புவனேஷ் மார்ச் ௨௭ பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//
    வாழ்த்துகளுக்கு நன்றி சித்ரா!!

  33. // இருந்தாலும் குதிரை கொள்ளு தான் சாப்பிடும், சமயத்துல Rum அடிக்கும்… உன்ன மாதிரி புண்ணாக்கு சாப்பிடாது…//

    சரவணா சார், குதுரை கொள்ளு தான் சாப்பிடும் னு எனக்கும் தெரியும்!! நீ இல்லாத மேட்டர் சொல்லரனு பஞ்ச் டயலாக் ல சொன்னேன்!!

  34. புவனேஷ் advance பிறந்த நாள் வாழ்த்துகள் (இதை(advance) எப்படிப்பா தமிழ்ல சொல்லுறது)!

  35. உங்க பிறந்த நாள் அன்னைக்கு கர்நாடகால விடுமுறை!

  36. //புவனேஷ் advance பிறந்த நாள் வாழ்த்துகள் (இதை(advance) எப்படிப்பா தமிழ்ல சொல்லுறது)!//

    நன்றி மோகன் அண்ணாச்சி!!

    //உங்க பிறந்த நாள் அன்னைக்கு கர்நாடகால விடுமுறை!

    அப்படியா? ஏன் ?

  37. மச்சி…பெண்ணியத்தைப் பற்றி உனது பதிவினை திரைகடலில் படித்தேன். அங்கு என்னால் பின்னூட்டம் இட இயலாததால் இங்கே எனது வாழ்த்துகள் உனக்கு…

    நான் சொல்ல வந்ததும் அதே கருத்தை தான்.. ஆனால் உனது வார்த்தைகள் மூலம் அழகூட்டியிருக்கிறாய் உனது எண்ணத்தை அந்த பதிவின் மூலமாய்…
    வாழ்த்துகள் மறுபடியும்

  38. //ஆனால் உனது வார்த்தைகள் மூலம் அழகூட்டியிருக்கிறாய் உனது எண்ணத்தை அந்த பதிவின் மூலமாய்…
    வாழ்த்துகள் மறுபடியும்//

    மச்சி நான் இந்த பாராட்டை எதிர் பாக்கல.. பதிவு எழுதி, படிச்சு பாத்தப்போ பெண்களை கொஞ்சம் குறை சொல்லற மாதிரி இருந்துச்சு.. அதனால கொஞ்சம் பயமா கூட இருந்துச்சு.. இப்போ உன் பாராட்டுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு 🙂

  39. திவு எழுதி, படிச்சு பாத்தப்போ பெண்களை கொஞ்சம் குறை சொல்லற மாதிரி இருந்துச்சு.. //

    நீ பொண்ணுங்க மனசு நோகாம சொல்லிகீற… சோ டரியல வுடு.. குஜாலா இரு…

  40. எதார்த்தம் + இளமை + மொக்கை +காமெடி = புவனேஷ்
    சரியா ?

  41. // ரொம்ப சந்தோசமா இருந்துச்சு!! //
    அதுவே இவ்வடியேனின் விருப்பம்…!! நோக்கம்….!!

    // எதார்த்தம் + இளமை + மொக்கை + காமெடி = புவனேஷ் //
    “கணக்கு” பண்ண சொல்லி தராங்கோ மச்சி… பொண்ணுங்க கிட்ட use பண்ணிக்கோ… என்ன “புவனேஷ்” க்கு பதிலா, அந்த பொண்ணு பேரு… அவ்வளவுதான்…
    என்ன கன்னத்துல [The Left, The Right] வாங்காம வீடு வந்து சேருவாயாக… அப்புறம் பிசிராந்தையார் தான், சோழன் தான்… 🙂

  42. // எதார்த்தம் + இளமை + மொக்கை +காமெடி = புவனேஷ்
    சரியா ? //

    மந்திரன்…!! சாரிங்க… 🙂
    “சரியா ?” ன்னு கேட்ட உடனே… “Correct” ன்னு தோணுது… நம்மளால பொறுக்க முடியல… அப்புறம் இந்த மரமண்டைக்கு “Correct” ன்னா என்ன தோணும்… அதான்… முடிஞ்ச உதவி புவனேஷ் க்கு…!!

  43. //அப்புறம் இந்த மரமண்டைக்கு “Correct” ன்னா என்ன தோணும்//
    இது எனக்கு தோனலையே ….

  44. //எதார்த்தம் + இளமை + மொக்கை +காமெடி = புவனேஷ்
    சரியா ?//

    சரியானு என்ன கேட்டா எப்படி ? நீங்க தான் சொல்லணும்!!

  45. //“கணக்கு” பண்ண சொல்லி தராங்கோ மச்சி… பொண்ணுங்க கிட்ட use பண்ணிக்கோ… என்ன “புவனேஷ்” க்கு பதிலா, அந்த பொண்ணு பேரு… அவ்வளவுதான்…
    என்ன கன்னத்துல [The Left, The Right] வாங்காம வீடு வந்து சேருவாயாக… அப்புறம் பிசிராந்தையார் தான், சோழன் தான்…
    //

    பொண்ணுங்க கிட்ட போய் மொக்கைனு சொன்னா கண்டிப்பா அது தான் நடக்கும்!

  46. //அப்புறம் இந்த மரமண்டைக்கு “Correct” ன்னா என்ன தோணும்…

    //இது எனக்கு தோனலையே ….

    அவரு தான் தெளிவா இந்த மரமண்டைக்கு ( புவனேஷ் க்கு ) “Correct” ன்னா என்ன தோணும் னு சொல்லறார் இல்ல? உங்களுக்கு ஏன் தோணனும் ? அந்த இடத்துல இருக்குற மரமண்டை நான் தான்.. நீங்க இல்ல!!

  47. அய்யயோ… ஆண்டவா.. மரமண்டை ன்னு என்னை சொன்னேன்…

    //மொக்கைனு சொன்னா கண்டிப்பா அது தான் நடக்கும்! //
    இததான் நானும் யோசிச்சேன் மச்சி… ரொம்ப லேட் ஆக…

  48. பர்த்டே க்கு சாக்லேட் குடுக்காட்டி பரவாலே மாப்ள… ஒரு (இரண்டு? எனக்கு மட்டும் இரண்டு சாக்லேட் மாதிரி…) வெறி பதிவ போடு…

  49. புவனேஷ், இன்னிக்கு யுகாதி அதனால கர்நாடகாவுல லீவு 🙂


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்