--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 26, 2009

பி.சி.சி.ஐ யும் , சோனியா உருவபொம்மையும் – இந்திய பாதுகாப்பும்!!


இப்போ கிரிக்கெட் ரசிகர்களுக்கு எல்லாம் கொஞ்சம் ஏமாற்றம் நிறைந்த காலகட்டம்..

(என்னடா ராசி பலன் சொல்லறது மாதிரி சொல்லரான்னு பாக்கறீங்களா? என்ன பண்ணறது நானும் ஏதோ ரெண்டு மூணு சீரியஸ் பதிவு போட்டுட்டேன் இல்ல.. இப்படி தான் ஆருடம் சொல்லுவோம் !!)

 

இது அரசியலில் விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டில் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் ஆன(வ) யுத்தம்!! யார் பெரியவர்கள் என்ற  Ego விளையாட்டு!!

 என்னை பொறுத்த வரை இதில் தவறு கிரிக்கெட் வாரியத்தின் பக்கம்.. சரியோ தவறோ இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிக்கலாம்.. அதற்காக இந்திய நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று வேறு நாட்டிற்க்கு செல்வது முறை இல்லை.. இது நமக்கு அவமானம்.. இந்த பிரச்சனையில் எனக்கு புரியாத சில கேள்விகள்

1) பாதுகாப்பு இல்லாத நாட்டில் எப்படி விளையாடுவது என்று லலித் மோடி கேட்கிறார்? இதே கேள்வியை உலக நாடுகள் வேர்ல்ட் கப் நடத்தும் போது கேட்டால் என்ன செய்வார்கள்?

2) வேர்ல்ட் கப் நடத்தவும் பாதுகாப்பு தர மறுத்தால் இவர்கள் பாடு என்ன ?

3) விசா முறையை சுலபமாக்க தென்ஆப்பிரிக்க அரசை மோடி கேட்டுக்கொண்டுள்ளார்!! பாதுகாப்பு காரணம் காட்டி இப்போதுள்ள முதல் நிலை வீரர்களுக்கு வெளி நாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டால் ஐ பி எல் நடத்த முடியுமா ??

4) நம் நாட்டில் விளையாட்டு துறை என்று ஒன்று இருகிறதா? அந்த அமைச்சர் பெயர் என்ன? அவர் ஏன் இந்த பிரச்சனையில் ஒன்னும் சொல்லவில்லை ? (இது தான் “கில்” மாவா ??)

4) கிரிக்கெட் ஏன் அந்த துறைக்கு கீழ் வரவில்லை??

5) சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வருவது மாதிரி அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் அண்ணன் மட்டும் தனி குடித்தனம் செய்வது எப்படி நியாயம் ??  அதிகம் வருமானம் வரும் விளையாட்டை தனியாருக்கு கொடுத்துவிட்டால் மற்ற விளையாட்டுக்கு எங்க இருந்து காசு வரும்? எப்படி அதை மேம்படுத்த முடியும்?? 

6) வரி மூலம் அரசுக்கு வந்த லாபத்தை கணக்கு காட்டுகிறார்கள் !! (போன ஐ பி எல் போட்டிகளில் கட்டிய வரிப்பணம் 93 கோடி என்று எங்கோ படித்தேன்!!). இது இந்திய அரசு விளையாட்டு துறைக்கு கீழ் இருந்தால் நேரடி வருமானமே  500 கோடியாக இருந்திருக்குமே??

7)இந்த போட்டிகள் நடந்தால் வீரர்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி மத்திய அரசுக்கு போகும்.. இதில் மாநில அரசுகளுக்கு ஒரு லாபமும் இல்லை.. அப்புறம் ஏன் மக்கள் பிரச்சனைகளை விட்டுவிட்டு இதற்க்கு அவர்கள் பாதுகப்பு தர வேண்டும் ?

8) இந்திய அரசு இனி ICL தான் எங்கள் ௮திகார்வபூர்வ அணி என்று சொன்னால் BCCI யின் நிலை என்ன ?

9) தேர்தல் இந்த மாசம் வரும் என்று தெரிந்தே போட்டியை வைத்துள்ளார்கள் என்று சொல்லும் அரசுக்கு, மார்ச் – ஏப்ரல் மாசம் பொது தேர்வு வரும் நம் பிரச்சாரங்கள் அவர்கள் படிப்பை கெடுக்கும் என்று தெரியாதா? ஏன் இதை எலெக்சன் கமிசன் னுக்கு பரிந்துரைக்க வில்லை!!

10) எல்லோரும் தென்ஆப்ரிக்கா போய்டா இந்திய ஜனநாயகத்தின் குடி மக்களின் ஒரே கடமையை செய்ய மாட்டார்களா?? ( அதாங்க ஓட்டு போடறது!!)

 

அப்பாடி ஒப்பேத்தி பாத்து கேள்வி கேட்டுட்டேன்..  யாரவது பதில் சொல்லுங்க..

10 out of 10   வாங்குபவர்களுக்கு இலவசமாக V.Good  சான்றிதழ் வழங்கப்படும்!!

இனி தலைப்புக்கான கேள்வி:

இப்படி ஒரு தனி நிறுவனத்தின் (BCCI) அதிகாரிகள் நேரடியாக இந்திய பாதுகாப்பை பற்றி அவதூறாக பேசியதற்கு தேசிய பாதுகாப்பு சட்டம் பாயாதா? சோனியா உருவ  படத்தை எரிப்பது போல் மாபெரும் குற்றம் செய்தால் மட்டும்  தான் இந்த சட்டம் பாயுமா? தேசிய பாதுகாப்பு என்பது சோனியா உருவ பொம்மையுடன் முடிந்துவிட்டதா ??


மறுவினைகள்

  1. //நம் நாட்டில் விளையாட்டு துறை என்று ஒன்று இருகிறதா? அந்த அமைச்சர் பெயர் என்ன? அவர் ஏன் இந்த பிரச்சனையில் ஒன்னும் சொல்லவில்லை ?//

    என்னவோ மத்த துறை அமைச்சர்கள் எல்லாம் அந்த அந்த துறை பிரச்சனைகளில் உடனே குடித்து சரி பண்ற மாதிரி இல்ல சொல்ற??? எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டை…

  2. // இந்திய அரசு இனி ICL தான் எங்கள் ௮திகார்வபூர்வ அணி என்று சொன்னால் BCCI யின் நிலை என்ன ?//

    நாராயண நாராயண!!!

  3. //எல்லோரும் தென்ஆப்ரிக்கா போய்டா இந்திய ஜனநாயகத்தின் குடி மக்களின் ஒரே கடமையை செய்ய மாட்டார்களா?? ( அதாங்க ஓட்டு போடறது!!)//

    மச்சி செத்து சொர்கத்துக்கு போன எங்க தாத்தாவே இன்னும் ஒட்டு போடறாரு… இங்க இருக்கு சவுத் ஆப்ரிக்கா… அவங்க ஒட்டு போடாம விட்டுடுவாங்களா என்ன?

  4. //அரசுக்கு, மார்ச் – ஏப்ரல் மாசம் பொது தேர்வு வரும் நம் பிரச்சாரங்கள் அவர்கள் படிப்பை கெடுக்கும் என்று தெரியாதா?//

    மச்சி சும்மா இரு… இவனுங்களால தான் மார்க் கம்மி ஆயிடுச்சுன்னு சொல்லிக்கலாம்னு பல பேரு பிளான் பண்ணி இருப்பாங்க…

    சீரியஸ் பதில் என்னன்னா “ஊருக்கு தான் உபதேசம்”

  5. //என்னவோ மத்த துறை அமைச்சர்கள் எல்லாம் அந்த அந்த துறை பிரச்சனைகளில் உடனே குடித்து சரி பண்ற மாதிரி இல்ல சொல்ற??? எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டை//

    இருந்தாலும் பிரச்சனை என்றால் எதாவது (அபத்தமாகவாவது) சொல்கிறார்கள் இல்ல ?

  6. எனக்கு இதுல புரியாத விஷயம் என்னன்னா ஒரு வேளை தேர்தலும் ஊர் திருவிழாவும் ஒரே நாள்ல வந்தா… எங்களால எதாவது ஒரு எடத்துக்கு தான் பாதுகாப்பு தர முடியும்னு சொல்லுவாங்களோ? அவ்வளவு கேவலமாவா இருக்கு நம்ம தேசிய பாதுகாப்பு?

  7. /இங்க இருக்கு சவுத் ஆப்ரிக்கா… அவங்க ஒட்டு போடாம விட்டுடுவாங்களா என்ன?//

    “அவங்க “ஓட்டை” போடாம விட்டுடுவாங்களா என்ன?!!”
    என்று இருந்திருக்க வேண்டும்.. இப்படி ஒரு மார்க் மிஸ் பண்ணிட்டியே!!

  8. //மச்சி சும்மா இரு… இவனுங்களால தான் மார்க் கம்மி ஆயிடுச்சுன்னு சொல்லிக்கலாம்னு பல பேரு பிளான் பண்ணி இருப்பாங்க… //

    அதாவது நம்மள மாதிரி பசங்க இன்னும் இருப்பாங்க.. கரெக்ட் ?

  9. கண்டிப்பா… அப்படி பசங்க இல்லாட்டி ஸ்டேட் ரேங்க் வாங்கி இருப்போமே

  10. என்ன பண்ணறது நானும் ஏதோ ரெண்டு மூணு சீரியஸ் பதிவு போட்டுட்டேன் இல்ல..//

    மச்சி இது கூட சீரியஸ் பதிவு தான்…
    நல்லா நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டுருக்க…

  11. 10 out of 10 வாங்குபவர்களுக்கு இலவசமாக V.Good சான்றிதழ் வழங்கப்படும்!!//

    10 out of 10 வாங்குபவர்களுக்கு மட்டும் தானா..பத்தாவதா பின்னூட்டமிட்டவர்களுக்கு இல்லையா?

  12. //மச்சி இது கூட சீரியஸ் பதிவு தான்…
    நல்லா நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டுருக்க…//

    தாங்க்ஸ் மச்சி!!

  13. /10 out of 10 வாங்குபவர்களுக்கு மட்டும் தானா..பத்தாவதா பின்னூட்டமிட்டவர்களுக்கு இல்லையா?//

    மச்சி உனக்கு V.V.Good இருக்கு !!

  14. //அதிகம் வருமானம் வரும் விளையாட்டை தனியாருக்கு கொடுத்துவிட்டால் மற்ற விளையாட்டுக்கு எங்க இருந்து காசு வரும்?//
    சிக்ஸர் மச்சி…!!!
    //எப்படி அதை மேம்படுத்த முடியும்?? //
    அதானே… அப்புறம் ஒலிம்பிக்ஸ் ல கோல்ட் மெடல்கள் இல்லங்க வேண்டியது…

  15. //அவர் ஏன் இந்த பிரச்சனையில் ஒன்னும் சொல்லவில்லை ? (இது தான் “கில்” மாவா ??)//
    “கில்” லுக்கு நடக்க குச்சி வேணும்னு நினைக்கிறன்… stump எ எடுத்து குடுங்கப்பா…
    நம்ம அரசியல்வாதிகள்ல ஒன்னு ரெண்டு பேர தவிர எல்லோர்த்துக்கும் தேவைப்படும்னு நினைக்கிறன்…

  16. //இது இந்திய அரசு விளையாட்டு துறைக்கு கீழ் இருந்தால் நேரடி வருமானமே 500 கோடியாக இருந்திருக்குமே??//
    முதல்வன் டயலாக் ஞாபகம் வருது மச்சி…

  17. பேசாம , நம்ம கலைஞர் தாத்தாவை “IPL” மேட்சை இந்தியா கொண்டு வரும் வரை உண்ணா விரதம் இருக்க சொல்லலாம் ..
    //10 out of 10 வாங்குபவர்களுக்கு இலவசமாக V.Good சான்றிதழ் வழங்கப்படும்!!//
    சீக்கிரம் “answer” பேப்பரை out பண்ணுங்கப்பா …

  18. சரி… ஓகே… try பண்ணி பாக்கலாம்…
    1) இப்பவே கேட்டு அதுக்காக ரெடி ஆகும் தொலைநோக்கோ…?
    2) முதல் பதிலில் ஒளிந்திருக்கோ இல்லியோ…
    3) கிரிக்கெட்டின் பில்லியன்-டாலர் மூளைக்கு, அப்படி நடந்தால் “positive எ எடுத்துகோங்க… மற்றவர்களுக்கும் சான்ஸ்” அப்படின்னு சொல்லுவார் என்பது என் நினைப்பு…
    4) “(இப்போதைக்கு அரசு ஒத்துக்கொள்ளும் சொற்களை சொல்ல வேண்டும்) பாகிஸ்தான் எல்லாம் போக வேண்டாம் மக்களே!! safety no no!! security no no”
    4) “foundation போட வேண்டுமப்பா” —
    5) “sponsor eh புடி!! என்னமோ பண்ணு!!”
    6) இவர்–“பங்கு போட இப்ப இருப்பவர்களுக்கே பத்தவில்லை”; அவர்–“ஹ ஹ !! நினைப்பு தான்”
    7) இத நாம தான் கேட்கணும் மச்சி… ஆனா ஒரு சில சமயம், மத்திய அரசும் மாநில அரசை கவனிக்கும் அப்படிங்கற நினைப்புதான்…
    8) இது நடக்கும்னு நினைக்கிற… சரி விடு… பதில try பண்ணுவோம்… “நாங்க தான் அதையும் hone up பண்ணுவோம்”
    9) Education system லையே உள்ள பூந்து கொள்ளையடிக்கும் “நாதா__” இருக்கிறார்களப்பா [அண்ணா பல்கலைகழக VC க்களை பக்கத்தில் இருந்து பார்த்து இருக்கோம்ல; அப்புறம் ஜேப்பியார் போல ரௌடிகள் பல்கலைகழகம் நடத்தினால்? மாணவர்களுக்கே பாதுகாப்பு இல்லை; அப்புறம் மாணவர்களும் மறியல், வெட்டு குத்து ன்னு படிகரதுக்குகாக போராடோரோம்னு இறங்குறாங்க, படிப்ப விட்டுட்டு]… நீ மார்ச்சில் எழுதினாலென்ன மச___யில் எழுதினாலென்ன… சரி பதில்–“maximum பன்னிரெண்டாம் வகுப்பு படித்தால் பதினெட்டு வயது இருக்குமா உனக்கு!! காலேஜ் ல படிக்கறது எல்லாம் ஜேப்பியார் காலேஜ் ல பண்ற மாதிரி பன்னுதுக!! அப்புறம் வாத்தியார்களும் ஜனத்தொகையில் மைனாரிட்டி தான்!! அடங்கு!!” — அரசின் பதிலுக்கு யார்தான் மறுபேச்சு பேசுகிறார்கள் நம்நாட்டில்… [அரசியலில் இறங்கலாம்னு நினைச்சா, நிறைய மாணவர்களுக்கு சூர்யா எங்க கண்ணுக்கு தெரியறார்…? பாரதிராஜா தான்…]
    10) நீயே பதில் சொல்லிடே… 🙂

    இதுல 11 பதில்கள் [உனக்கு இன்னும் “கணக்கு” சொல்லித்தரனும்… சின்ன பயலா இருக்கியே] இருக்கு… ஒன்னு தப்பா இருந்தாலும் 10/11 குடுப்பா.. போதும்… ஹி ஹி… எல்லாமே தப்பா இருந்தா… முட்டைய என் பிறந்த நாள் பரிசா வெச்சுக்கோ…

  19. ஒரு clarity க்காக–>:

    //கிரிக்கெட்டின் பில்லியன்-டாலர் மூளைக்கு//
    –மோடி எ தான் அப்படி சொன்னேன்–
    //“(இப்போதைக்கு அரசு ஒத்துக்கொள்ளும் சொற்களை சொல்ல வேண்டும்) பாகிஸ்தான் எல்லாம் போக வேண்டாம் மக்களே!! safety no no!! security no no”//
    –இது நம்ம “கில்”லு–

  20. //பேசாம , நம்ம கலைஞர் தாத்தாவை “IPL” மேட்சை இந்தியா கொண்டு வரும் வரை உண்ணா விரதம் இருக்க சொல்லலாம்//

    வாங்க மந்திரன்.. வரும்போதே வில்லங்கமா.. அப்புறம் அவங்க முடிவ மாத்தி இந்தியால நடத்துனா இதயம் இனிக்கும். கண்கள் பணிக்கும்.. நமக்கு இது தேவையா ?

  21. ஆனந்த், வா மச்சி!!

    //முதல்வன் டயலாக் ஞாபகம் வருது மச்சி…

    எந்த டயலாக் ?

  22. ////கிரிக்கெட்டின் பில்லியன்-டாலர் மூளைக்கு//
    –மோடி எ தான் அப்படி சொன்னேன்–//

    இது கரெக்ட்டா புருஞ்சுது..

    //“(இப்போதைக்கு அரசு ஒத்துக்கொள்ளும் சொற்களை சொல்ல வேண்டும்) பாகிஸ்தான் எல்லாம் போக வேண்டாம் மக்களே!! safety no no!! security no no”////

    இது புரியல !!

  23. புவனேஷ், நல்லா கேள்வி கேட்டு இருக்கீங்க. ஆனா பதில் தான் வராது. எனக்கு ஒன்னு புரியலை, ஏன் இவங்களால மேட்ச் தள்ளி வைக்க முடியாதா? எனக்கு கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன்.

  24. //10 out of 10 வாங்குபவர்களுக்கு இலவசமாக V.Good சான்றிதழ் வழங்கப்படும்!!//

    இதை வச்சி என்ன பண்ணுறது?

  25. Dear Baby Brother,
    Happy Birthday.
    சீரோடும் சிறப்போடும் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்.

  26. // ஏன் இவங்களால மேட்ச் தள்ளி வைக்க முடியாதா? எனக்கு கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன்.//

    இதுல நம்ம ஊர் ஆட்டகாரகள் மட்டும் ஆடவில்லை.. வெளிநாட்டு வீரர்களுக்கு இது தான் off -Season.. இன்னும் கொஞ்ச நாள் போனால் அவர்களை பிடிக்க முடியாது என்பது BCCI வாதம்!!

  27. //இதை வச்சி என்ன பண்ணுறது?//
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  28. //Dear Baby Brother,
    Happy Birthday.
    சீரோடும் சிறப்போடும் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்.//

    ரொம்ப நன்றி அக்கா.. ரொம்ப ரொம்ப சந்தோஷம்!!

  29. இன்று பிறந்த நாள் காணும் ஆ.மு.ச. தலைவர் புவனேஷிற்கு 45 வது வட்டம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
    இவண்,
    மோகன்.

  30. //“(இப்போதைக்கு அரசு ஒத்துக்கொள்ளும் சொற்களை சொல்ல வேண்டும்) பாகிஸ்தான் எல்லாம் போக வேண்டாம் மக்களே!! safety no no!! security no no”//– பாகிஸ்தான் போனா பாதுகாப்பு இல்லன்னு சொல்றாரு[எல்லோர்க்கும் தெரிந்தது, ஒத்துகொள்ளுவர்]; உள்ளூர் பாதுகாப்பு பற்றி பேசினா நெர்ய பேர்க்கு பதில் சொல்லணும்;

  31. //முதல்வன் டயலாக் ஞாபகம் வருது மச்சி…
    எந்த டயலாக் ?//
    புகழேந்தி: “சட்ட ஒழுங்கில் அமைதி காபோம்”ன்றீங்க… ஆனா அந்த சட்ட ஒழுங்கு செயல்படாம இருக்கறதுக்கு காரணமே நீங்கதானே… “ஜாதி இல்லாத சமுதாயம் அமைப்போம்”ன்றீங்க… ஆனா ஜாதி கலவரத்த ஊக்குவிக்கறதே நீங்கதானே… நீங்க எல்லா ஆழும்கட்சி காரங்கள கவுக்கனும்னு செலவளிக்கிற மூளைல.. நூத்துல ஒரு பங்கு மக்களுக்கு நல்லது செய்யனம்னு செலவளிசிருந்த.. நம்ம நாடு என்னிக்கோ முன்னேறிருக்கும்…

    இந்த ப்லோக் ல கேள்வி எல்லாம் சூப்பர் மச்சி… 🙂

  32. மோகன் அண்ணே.. ரொம்ப நன்றி !!

  33. நாங்க எல்லாம் படிக்கற காலத்துலே கேள்விக்கு பதில்( தெரிஞ்சா தானே சொல்றது) சொல்றதில்ல… இப்ப போய் கேட்கிறீங்களே…
    இருந்தாலும் வரவர ரெம்ப கேள்வி கேட்கிறீங்க தம்பி. ஏன் இப்படி?

  34. Belated birthday wishes machi…

  35. இன்று போல என்றும் வாழ எனது வாழ்த்துகள்

  36. //இருந்தாலும் வரவர ரெம்ப கேள்வி கேட்கிறீங்க தம்பி.//

    தங்கி இருக்கிற ரூம்ல உள்ள பசங்கள எல்லாம் கேள்வி கேட்டு உயிரை எடுத்தாச்சு… அடுத்து ப்லோக் [இதோ..]… அப்புறம் ஆபீஸ்… அப்புறம் state… அப்புறம் உலக அளவுல…
    பயலுக்கு இன்னும் “பர்த்டே பம்ப்ஸ்” போடலன்னு நினைக்கிறேன்…

    //ஏன் இப்படி?//
    ஊஹ்ம்ம்… முடியாது…
    இப்போ தான் எக்ஸாம் எழுதி முடிச்சோம்… இன்னும் results வரல…
    பாட்டிகிட்ட கண்மணி நெறைய கேட்கறதுனாலே, அலர்ஜி யோ? [காதுல? why blood? same blood]

  37. // தங்கி இருக்கிற ரூம்ல உள்ள பசங்கள எல்லாம் கேள்வி கேட்டு உயிரை எடுத்தாச்சு.

    ஆனந்த் தம்பி, நீங்க புவனேஷ் கூடவா தங்கி இருக்கீங்க?

    புவனேஷ், நீங்க எப்படி மூட்டை பூச்சி கூட காலந்தள்ளுறீங்க?

  38. //அப்புறம் உலக அளவுல…
    பயலுக்கு இன்னும் “பர்த்டே பம்ப்ஸ்” போடலன்னு நினைக்கிறேன்//

    என்ன ஒரு வில்லத்தனம் ?

  39. //இருந்தாலும் வரவர ரெம்ப கேள்வி கேட்கிறீங்க தம்பி. ஏன் இப்படி?//

    குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் பதிவாளர் ஆகா தான் அக்கா!!

  40. //Belated birthday wishes machi…//
    //இன்று போல என்றும் வாழ எனது வாழ்த்துகள்//

    ரொம்ப நன்றி மச்சி!!

  41. //ஆனந்த் தம்பி, நீங்க புவனேஷ் கூடவா தங்கி இருக்கீங்க? //

    இல்ல அக்கா, அவரு US.. நான் இந்தியா.. அவர நான் பாத்தது கூட இல்ல!!

    //புவனேஷ், நீங்க எப்படி மூட்டை பூச்சி கூட காலந்தள்ளுறீங்க?

    ஆனந்த், இந்த கேள்வி புருஞ்சுதா ?

  42. // //புவனேஷ், நீங்க எப்படி மூட்டை பூச்சி கூட காலந்தள்ளுறீங்க?
    ஆனந்த், இந்த கேள்வி புருஞ்சுதா ?//

    ஹ்ம்ம்.. புரிஞ்சுது மச்சி… //ஆனந்த் தம்பி, நீங்க புவனேஷ் கூடவா தங்கி இருக்கீங்க? // நைச்சியமா இப்படி மரியாதையோட ஆரம்பிக்கும்போதே ஏதோ வில்லங்கம் இருக்கும்ல… நம்ம இனத்துக்கே உரித்தானது…
    அக்காவின் பாசத்துக்கு அளவே இல்ல போங்கோ… அக்கா மூட்டை பூச்சி கூட மச்சானும், கண்மணியும் சந்தோஷமா காலம்தள்ளும் போது, தம்பி மூட்டை பூச்சி கூட மச்சி புவனேஷ்க்கு என்ன… தாரளமா காலந்தள்ளலாம்…

  43. //அவர நான் பாத்தது கூட இல்ல!!//
    நானும் சொல்லிட்டுதான் இருக்கேன்… சீக்கிரம் onsite assignment வாங்கிட்டு வாப்பா… எல்லோரும் சேர்ந்து கூத்தடிகலாம்னு… எங்கே கேட்கராப்ள மச்சான்… கல்யாணத்தையும் ஒரேயடியா பண்ணிட்டு வரேங்கராறு… சரி.. நாமதான் சீறிகிட்டு வர்ற single சிங்கமாச்சே… அமைதியா கொஞ்ச நாள் save பண்ணி, இருப்போம்…

  44. hmmmmmmmm……………….. No way.


Bhuvanesh -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

பிரிவுகள்